38
உலகக் கோடீஸ்வரர்கள் சிலர் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை விட இவர் தர்மம் செய்த சொத்துக்களின் மதிப்பு அதிகம்…
உலக பணக்காரர்கள் பட்டியலில் இவரைச் சேர்க்க மறந்து ஈனத்தனம் செய்தன சில இழிந்த பத்திரிக்கைகள்…
தர்மத்தின் மகனை தன் மகனாய் எடுத்து உயர்வு சேர்த்தன வானத்தின் நட்சத்திரக்கைகள்…
இவர் எளிமைகளின் நேசம்
இவரிடம் பாடம் கற்க வேண்டும் இந்த தேசம்…
அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவர்….
இருக்கும் சொத்தையும் எடுத்து கொடுத்ததில் ஓசைப்படாதவர்…
உழைப்பவர் உழைப்பை உறிஞ்சி எடுத்து ரத்தம் சேர்க்கும் ரத்த வாலா இல்லை.. ஞானத்தின் புத்த வாலா..
ஒரு சுத்த வாலா ..
இந்த ரத்தன் டாடா..
எவரையும் கெடுத்துக் கொழுத்தவர் இல்லை ..
தன் பொருளை மற்றவருக்குக் கொடுத்துச் சிவந்தவர்…
கோடிகள் இருந்தும்
ஒரு கோடியில் அமர்ந்து
பத்து ரூபாய் கப் கேக்கை வெட்டும் இவர்தான் பிறந்தநாள் கொண்டாடத் தகுதி வாய்ந்தவர்…
எளிமையே இவரிடம் கற்கும்
பாடம்..
அரசாங்கச் செலவில் வேடம் கட்டும் மூடங்களுக்கு இவர் பாடம் சொல்லும் பள்ளிக்கூடம்….
செல்வத்தில் பிறந்து வளர்ந்த செல்லப்புறா..
சேர்ந்து வாழ இறுதிவரை இல்லை ஓர் இன்ப நிலா…
நாளுக்கொரு நடிகையோடு
கூடிக் கழிக்கும் ஈனத்துறவிகளுக்கு மத்தியில் இவர் ஒரு ஞானத் துறவி …
தொழில் துறையில் கொற்றவர்
இவருக்கு நிகரில்லை கொள்ளைகளில் கோடிகள் சேர்த்த மற்றவர்…
தொழிலாளருக்கு உற்றவர்
வெளிநாடுகளில் சென்று தொழிற்கல்வி கற்றவர்
வணிகத் துறைகளில்
அனேக விருதுகள்
தலைமைப் பதவிகள்
பட்டங்கள் பெற்றவர்…
இருந்தும்
ஆசைகள் அற்றவர்
பேராசைகள் இற்றவர்…
சீக்கிரம் போய் சேர மாட்டானா என்று எத்தனையோ பேரை ஏசுகிற உலகம்
இவரிடம்தான் இன்னமும் கொஞ்சம் இந்த தருமமகன் வாழ்ந்திருக்க மாட்டானா என்று கேட்க வைக்கிறது…
நான்கு முறை காதலில் தோற்றார் …
எவர் மனதையும் நோகடிக்கவில்லை…
ஒரே ஒரு முறை சாதலில் வென்றார் …
உலகமே அழுகிறது…
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment