கவிதை

தூக்கணாங்குருவி குடம்பை

265views
நீரிலிருந்தும் அழுகாத நீரின்றியும் வாடாத
உடற்பிணி அண்டவிடாத உடற்சூட்டை தணிக்கும்
தூய்மையான இடத்தில் செழுமையாக வளரும்
துவளாத தூயப்புல் தருப்பை புல்லெடுத்து
ஆற்றங் கரையோரத்தில் அரவம் வரமுடியாத
வரிசையாக உயர்ந்து வளர்ந்து நிற்கும்
தென்னை, பனை, ஈச்ச மரத்தின் உச்சியிலே
குடுவை போன்று குடம்பை கட்டி
வீசப்போகும் பருவக்காற்றுக்கு நேர்எதிர் திசையில்
குறுகிய நுழைவு வாயில் வைத்து
இரண்டாக வகுத்து ஈரறைகள் அமைத்து
ஓரறைஅம்மையப்பருக்காம்மற்றோரறை குஞ்சுகுறுமன்களுக்காம்
சிறுசிறு களிமண் உருண்டைகளை கூட்டினுளொட்டி
ஒற்றை சிறிய அலகால் பற்றிய
ஒளிஉமிழும் மின்மினி பூச்சிகளை ஒட்டிவைக்க
இரவினில் அணிக் குடம்பையாக காட்சியளிக்க!
பெண்குருவியை கூட்டி வந்து தான்கட்டிய
கதிர்ச்சுடரால் கருகாத உட்டணத்தை உட்புகவிடாத
விசும்பின் துளி வீழின் மக்காத
மழை,புயல்,காற்றை தாங்கும் இரும்புக்கோட்டை கூட்டைகாட்டி பிரமிக்கவைக்க!
பெண் குருவி இசைந்தால் இரண்டும்
ஈரறையின் ஓரறையில் வாழ
முட்டைகளை மற்றொரு அறையி லிட்டு
மகிழ்ச்சி பொங்கும் வாழ்க்கை வாழுமாம்!
பெண் குருவி இசையவில்லை யெனில்
ஆண்குருவி மீண்டும் புதியதொரு  குடம்பை கட்ட வேண்டுமாம்!
  -கீதா அருண்ராஜ்

3 Comments

  1. தூக்கணாங்குருவியிடம் நாம் கற்க வேண்டியவை அதிகம் உள்ளது.சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!