கவிதை

இந்த புன்னகை போதாதா நாம் வைத்துள்ள அன்பை உணர்ந்து கொள்ள..

102views
கட்டி அணைத்துதான் உன்காதலை
சொல்ல வேண்டுமென்றில்லை…
உன் கைப்பிடிக்குள் என் கைகள்
இருந்தாலே போதும்…
உன் கோபங்களும் அதிகாரங்களும்
என்னை என்ன செய்து விடபோகிறது..
உன் கைபிடியில் என்கைகள்
இருக்கும் வரை அவை வெறும்
பாசாங்குதான்…
நரை சொல்லும் நாம் வாழ்ந்த
வாழ்வின் அர்த்தங்களை…
அவை எழுதிவிட்டு செல்லும்
நம் வாழ்வின் சாசனங்களை..
இந்த புன்னகை போதாதா
நாம் வைத்துள்ள அன்பை
உணர்ந்து கொள்ள..
அவை சொல்லி விட்டு செல்லும்
இதுபோல் காதல் எங்கும்
இல்லையென
திருமதி கௌரி சற்குணம்
காங்கேயம்
ஈரோடு

Leave a Response

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!