79
மாமியாரின் மறு உருவம்
பல நேரங்களில்
அம்மாவின் அடையாளம்
சில நேரங்களில்
முடியாத நேரத்தில்
நான் இருக்கிறேன்
என்ன வேலை
செய்ய வேண்டும்?
என்று கேட்கும் போது
முடியாத உடல்நிலையும்
சரியாகி விடும் தருணங்கள்
இரண்டும் பெண் குழந்தைகளா?
என்பவர்களுக்கு
இறுதியில் எங்களை
கவலைப்படாமல்
பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும்
ஆணின் வீரத்தையும்
தைரியத்தையும்
எப்பொழுதும் கைக்கொண்டு
வாழும் செல்வங்கள்
பவுன் அறுபதாயிரம்
சேமியுங்கள் சேமியுங்கள் என்று
உறவினர்கள் சொல்லும் போது
வைரங்களுக்கு ஏன் தங்கம்
என்று சொல்லிக் கொள்வேன்
மகள்கள் தந்தைகளுக்கு
கிடைத்திடும் இன்னொரு தாய்
அப்படி என்றால்
அம்மாக்களுக்கு
அதே அதே
அனீஸ்முஸ்தபா,
சிவகாசி
add a comment