42
சுவனங்களுக்கான பட்டோலைகளை
நபிகள் எழுதினார்கள் …
அதனை இறைவன்
எந்த மறுப்பும் இல்லாமல் அங்கீகரித்தான்…
அவர்களின் வாய்ச்சொற்கள் சுவனங்களில் சூட்டப்படும்
பொற்கடகங்களாகவும்
மணிமகுடங்களாகவும் ஆகின…
நபிகள் பெருமான் நன்மைகளை முன்னிறுத்திப் பேசுகிற போதெல்லாம் சுவனத்திற்கான
ஒரு சுந்தர மனிதர்
“நபிகளே…!
எங்கள்
நாயகப் பெருமானே…!
அந்தக் கூட்டத்தில்
என்னையும்
சேர்த்துக் கொள்ளக் கூடாதா”? என நெக்குருகும் வேளைகளில்…
“ஆமாம்…
அந்தக் கூட்டத்தில்
நீங்களும் உண்டு”
என்று நபிகளார்
சோபனம் சொன்னார்கள்…
பேரிறைவன்
அதனை அங்கீகரித்து
“சரி” என்றான்…
ஒற்றை வார்த்தைச் சோபனச்சொல் அதுதான்…
எதிர்பாராத வேளைகளில் எதிர்பார்க்கப்பட்ட நபிகளிடமிருந்து எதிர்பார்க்கின்ற
ஒரு சுப சோபனம்…
ஏங்குகிற மனங்களில்
ஏக்கம் தீர்க்கும் சொல்… ஆசைப்படுகிற சொர்க்கங்களின்
அடைகாப்புச் சொல்… கேட்டவருக்கெல்லாம்
முன்மொழியப்பட்ட விருப்பங்களின் சொல் …
அதனை இறைவனே அங்கீகரித்தான்…
தவறுகளாய் இல்லாத தங்கங்கள் …
சிகரங்களாய் இல்லாத சிகரங்கள்…
ஆனால்
ஒவ்வொரு பொழுதிலும் ஒவ்வொரு செயலிலும்
நபிகளுக்கான சிம்மாசனங்களை
தங்கள் இதயங்களால் இருத்தியவர்கள்…
உயிர் கொடுத்தும்
ஓம்புவோம் என்றவர்கள்…
தம்மிடத்தில் தம்மையும் நபியிடத்தில் நபிகளையும் வைத்தவர்கள் …
ஆனால் ஒருபோதும்
தன்னைப் போல்தானே நபி என்று தவறியும் கூட
ஒரு வார்த்தை சொல்லாதவர்கள்…
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
add a comment