கவிதை

வானமளந்த வன்மொழி வாழியவே

124views
வானமளந்த வன்மொழி வாழியவே என்றென்றும்
வண்ணம் கூட்டும் பொன்னும் மின்னும்
வஞ்சம் இல்லா பஞ்சணையாய் மிஞ்சும்
வாடிய பயிருக்கு உயிராய் உலவும்
வாய்மையும் தந்தே உவமையாய் உழலும்
வெற்றியும் பெற்றிடும் வேதியல் புரிந்திடும்
வேதனையும் மாற்றிடும் சோதனை நிறுத்திடும்
வன்முறையும் ஒழித்திடும் வளமாய் வளர்ந்திடும்
வந்தனைகள் நிந்தையின்றி சிந்தனையில் ஊறிடும்
வள்ளலாய் தன்னையே தரணியில் தந்திடும்
வரமும் தந்தே தன்னை உணர்த்திடும்
வேகாத பகுதியும் வெந்து தணித்திடும்
வேடனுக்கு சொல் அம்பினை அளித்திடும்
வேராய்ப் படர்ந்து மலரினை சொறிந்திடும்
வேழமாய் நிலைத்து ஞானத்தைத் தேக்கிடும்
வேதமாய் மொழிகளில் முன்னோடியாய் திகழ்ந்திடும்
போதமாய் எங்கும் பொறியை விஞ்சிடும்
பசுமை நினைவாய் மறவாமல் உறைந்திடும்
பகைமை இல்லாத வாழ்வினை செலுத்திடும்
பகலவன் தன்னை வஞ்சமின்றி ஒளிர்த்திடும்
பாக்களைத் தந்தே பயனைப் பெற்றிடும்
பண்ணாகி நின்று விண்ணை அளந்திடும்
பகல் இரவாய் இரவு பகலாய்
பைந்தமிழ் முப்பொழுதும் மும்மலமும் நீக்கிடும்
சிவ நடராஜன்
கூடுவாஞ்சேரி
சென்னை- 603 202
அலைபேசி : 9790780762

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!