கவிதை

இந்தியா எங்கும் கோலாகலம்

263views
கவிஞர் சேலம் சங்கர் எம்.ஏ.,
தூவிடுவோம் மலர்த் தூவிடுவோம்
பாரத தேவியைப் போற்றிடுவோம்
வெற்றிச் சங்கினை ஊதிடுவோம்
எட்டுத்திக்கிலும் புகழைப் பரப்பிடுவோம்.
தேன்சிந்தும் தமிழெங்கள் மொழியாகும்
தமிழகம் எம் விழியாகும்
தென்னைகள் செறிந்த நாடடியோ
கேரள தேசம் பாரடியோ.
காவிரி பிறக்கும் கன்னடமே
சந்தனம் மணக்கும் நம்மிடமே
நெல்மணி குவித்திடும் ஆந்திரம்
கிருஷ்ணா நதியின் கேந்திரம்.
ஒடிசா எங்கள் மாநிலமே
பாரத வாரிசு நாங்களுமே
கனிவளம் நிறைந்த பீகாராம்
புத்தரின் அன்பே ஆதாரம்.
உ.பி., ம.பி., ராஜஸ்தான்
கோவா, குஜராத், ஹரியானா
இம்மாநிலம் யாவும் நமதாகும்
இதில் பேதம் காண்பது சரிதானா?
சணல்கள் விளையும் வங்காளம்
இரும்பாலைகளால் வரும் பொற்காலம்
பெட்ரோல் ஈந்திடும் அஸ்ஸாமும்
மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்த்
பஞ்சாப், சண்டிகர், மேகாலயா
இவைதான் நமக்கு தேவாலயம்.
மும்பை பொருள்வளர் திருக்கோயில்
இந்திய நாட்டின் நுழைவாயில்
சிக்கிம், கிழக்கில் அருணாச்சலம்
அடடா! எங்கும் கோலாகலம்!

4 Comments

  1. கவிதை வரிகள் அருமை
    அனைத்து மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற்று அற்புதமாக அமைந்திருக்கிறது
    வாழ்த்துக்கள்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!