18views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
அணைகள் கட்டியது
போதும் அதிகாரிகளே.,.
இனிமேல் கொஞ்சம்
மழைநீர் கட்டுங்கள்…
இயற்கை பொத்துப் பொழிகிறது
தேவைகளிலும்
தேவையற்ற பொழுதுகளிலும்…
தேவையற்றவை
கடலுக்கு வீணாகின்றன…
300 400 டீசி
கன அடிகள்
கடலில் கலக்கின்றன…
30 டிசி நீரே சென்னை மாகாணத்தின்
ஒரு மாத வரவுக்கு வரும்…
காணும் இடங்கள் எல்லாம்
கண்ட குளங்கள் இப்போது
காணாமல் ஆக்கப்படுகின்றன..
எங்கே
எந்தக் குளம் எவரிடம்
என்ற விவரங்கள் எல்லாம்
அரசியலாளருக்கு தெரியாது
அதிகாரிகளுக்குத் தெரியும்…
ஆவன செய்து
ஆனை பலத்தோடும்
அரசு பலத்தோடும்
அவற்றை மீட்டெடுங்கள்…
வீணாகும் மழைநீர்
வீணாகாமல்
தேவைப்பட்டால் இன்னும்
பல குளங்கள் கட்டி தேக்குங்கள்…
ஆழத்தூர்வாரி
நீர்மட்டம் நீட்டுங்கள்…
எங்கெல்லாம் பாசனம்
பட்டுப் போகுமோ அங்கெல்லாம்
பச்சைப் பசேலாக
புதுப்புது குளங்கள் வெட்டுங்கள்…
குப்பைக் கழிவுகள் சேராமல்
அடிக்கடி சுத்தப்படுத்துங்கள்..
கல்லணை போல
இந்தக் குளவணைகளால்
நெல்நிறைந்து விளையட்டும்…
கொடுத்துச் சிறந்தவன் தமிழன்
குடிநீருக்காக
அடுத்தவனிடம் கையேந்துவதா?
இனி பக்கத்து மாநிலங்களால்
பயனில்லை…
ஒன்றிய அரசாலும் உதவிகள் இல்லை…
எந்த அரசியல்வாதிகள்
ஆட்சிக்கு வந்தாலும்
ஆளப்போவது நீங்கள்தான்..
விவரம் தெரிந்தவர்கள்
விவரிக்கிறார்கள்
சிக்கல் அவிழ்ப்பவர்களும் நீங்கள்…
சிக்கல்அமைப்பவர்களும் நீங்கள்…
ஒரு நாணயத்தின்
இரண்டு பக்கம் போல்
உங்களுக்கும் இரண்டு பக்கங்களும்
தெரிகின்றன..
அதில் எந்தப் பக்கம்
நாட்டுக்கு நல்லது என்று
கூட்டம் போட்டு
திட்டம் தீட்டுங்கள்…
அதன்
நல்ல பக்கத்தையே
நாட்டுக்கு காட்டுங்கள்…
அமைச்சர்கள் திட்டங்களை
அறிவிக்கக்கூடியவர்கள்தான்
நீங்கள்தான்
அரங்கேற்றம் செய்யக்கூடியவர்கள்…
ஆயுதம் உங்கள் கைகளில்…
ஆவன செய்யுங்கள் அதிகாரிகளே…
அன்பானவர்களே…!
நீங்கள் மனது வைத்தால்
தேசம் பிழைக்கும்
மக்கள் வாழ வழி கிடைக்கும்…
மக்களில் நீங்களும்
உங்கள் குடும்பமும்
உண்டு தானே…
add a comment






