கவிதை

நாடறியாத நாகரீக உச்சம்

68views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
இன்னா செய்தாரை ஒறுத்து
அவர்
நாணும் நன்னயம்
இப்படியும் செய்யலாமோ?
அரசியல் அரிச்சுவடி கூட அறியாமல்
எழுதிக் கொடுத்ததை படித்து
ஏகடியம் பேசியவர்
விளையாட்டு பொம்மையாய்
இன்று அரங்கத்தில்
ஆள வந்திருக்கிறார்…
ஆள வந்தவர்
ஆட்டம் ஆடுவதற்கு முன்பே
ஆட்டம் கலைப்பதற்கான
தீவிர முயற்சிகளில் தீயோர்…
பலியாடுகள் போலப்பல்லுயிர்கள்
பலி கொடுத்து
நாடு வந்தவர்
நடுங்கி நின்ற வேளையில்
நீ போய் கை கொடுத்து
தூக்கி விட்டு இருக்கிறாய்…
தோழமைக் கட்சிகள்
உன் தலைமையிலேயே அணிவகுக்க
எதிரியாய் இருந்தாலும்
விழுந்து விடாமல்
எழுப்பி விட்டு இருக்கிறாய்
எங்கள் தளபதியே..
தமிழகம் இதுவரை பார்த்தறியாத
நாகரீகப் புரட்சியின்
உச்சம் இதுதான்…
கலைஞருக்கு மட்டுமல்ல
மகன் நீ…
தமிழகத்தை காக்க விரும்பும்
அத்தனை பேருக்கும்
இனி நீயும்தான் மகன்…
மறந்தாய்… மன்னித்தாய்…
மாற்றான் தோட்டத்து
இந்தக் கதம்பப் பூக்கள் மணக்குமா….?
தீய சக்தி என்றவன்
இந்த தூய சக்தியை என்னவென்பான்…?
சற்றுப் பொறுப்போம்
பார்த்துத் தெளிவோம்…
வாழிய எங்கள் தளபதியாரே…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!