கவிதை

உடலினைப் பேணிடு

174views
அம்மாவின் சமையல்
ருசியைக் கூட்ட
ஆசையாய்த் தின்றேன்
வயிறு முட்ட
இரைப்பையின் இரைச்சல்
கடமுடா ஆட்ட
ஈசனை அழைத்தேன்
வலியினை ஓட்ட
உடற்பயிற்சி மறந்ததை
அவனும் சுட்ட
ஊக்கம் கொண்டேன்
குறுநடை போட
எளிதாய் பிரிந்து
வாயுவும் ஓட
ஏப்பம் வந்தே
வாய்வழி பாட
ஐக்கிய மானேன்
உறக்கத்தை நாட
ஒத்துழைப்பு தந்தது
உடலும் கூட
ஓய்வினில் களித்தே
கண்களும் மூட
ஔடதம் எதற்கு
உடலினைப் பேணிட…!?
டாடோ செ.க. சந்திரகலா, சென்னை

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!