100views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
செவ்வானச் சிவப்பு
மாறாத போலவே
ஒவ்வாதப் போர்கள்
ஒவ்வொரு தேசங்கள் மீதும்…
உலக வல்லரக்க நாடுகளின்
ஓங்கி வளர்ந்த ஆசைகள்…
மற்றவர் வளர்ச்சிகள்
சிதைக்க நினைக்கும்
மன நிலைகள் சின்னத்தனங்கள்…
செந்தாமரை முகச் சிரிப்புக்குள்
சொல்லாமல்ந்திருக்கும்
செவ்விஷம் ஒளித்தகருக்கும்
கருநாகங்கள்..
யார் வளர்ச்சியை
யார் முடிவு செய்வது
யாரைக் கொண்டு
உலகம் இயங்குவது…?
உன்னுடையது போலவே
ஒவ்வொரு உயிரும்…
உன் குடும்பம் போலவே
ஒவ்வொரு குடும்பமும்..
உன் தேசம் போலவே
ஒவ்வொரு தேசமும்…
அடக்கி ஆள்வேன் என்று
சொல்வதற்கு
உனக்கென்ன உரிமை…
அடுத்தவர் தேசங்கள்
தலையிட்டுக் குதறுவதில்
உனக்கென்ன மமதை…?
கறுப்புகளில் சிவப்புகளில்
எழுதப்பட்டு இருப்பதா தேசமயம்..
எளியவர்கள் வலியவர்கள் என்று
பிரிக்கப்பட்டு இருப்பதா உலகமயம்…?
உன்னாட்டு மக்களுக்கானதை
நீ உறுதி செய்வது போலவே
மற்ற நாட்டு மக்களுக்குமானவை
அவர்கள் செய்கிறார்கள்…
உனக்கென்ன வந்தது
எல்லோரையும் நாட்டாமை செய்யய
நீ யார் நரியே…?
மண்ணோடு மக்கிப் போகப் போகிற
மலப்புழுதான் நீ…
அடுத்தவன் மண்ணுக்கு
ஆசைப்படுவதில் உனக்கென்ன
அலாதிப் பிரியம்?
அடுத்தவர்
தேசக் கிரீடம் பறிப்பதில்
உனக்கென்ன இவ்வளவு
கொடூர அரக்கத்தனம்…?
அவரவர் வழிமுறைகள்
அவரவர்க்கு அழகு…
அவரவர் முகங்கள்
அவரவர்க்கு போலவே…
அதில் கீறல் விழ
எவரும் விரும்புவதில்லை…
அவரவர் தேசங்களும் அப்படித்தான்…
add a comment






