கவிதை

வீரனுக்கு மரணம் இல்லை

54views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
சுவனம் திறந்திருக்கும்
புண்ணிய மாதத்தில்
ஒரு சுதந்திரப் பறவை
சொர்க்கத்தில் குடியேறி இருக்கிறது…
அநீதியாளர்களின் அடக்குமுறைக்கு
அஞ்சாத இன்னொரு
பாரசிகச் சிங்கம்
கோழைகளைப் போல்
பதுங்கு குழிகளுக்குள் பதுங்காமல்
சுவன வாசல் தட்டி …
மார் தந்து… வீரப்பண்பாடிப்
பறந்திருக்கிறது…
கால் பிடித்தோ…
கொஞ்சம் கருணை காட்டச் சொல்லிக்
கெஞ்சியோ… நீட்டித்திருக்கலாம் நீள ஆயுள்…
ஆயுத அணுச்சாலை பேச்சு வளர்த்து
ஆரத் தழுவி…
அடிவருடி… கொடுங்காயம்
ஏற்படுத்த முடியாதவாறு
குள்ள நரிகளைக்
குளிர்வித்து இருக்கலாம்…
ஆனால் தேச மக்களுக்கு
மாலை நிலவாகவும் எதிரிகளுக்கு
நடுப்பாலைக் கதிராகவும்
பழுக்கக் காய்ச்சி சூடு போடும்
பகட்டில்லாத பண்பான தலைவர்
அலி கொமேனி
வயது முதிர்ந்தாலும்
தளர்ந்து போகாத
பாரசிகச் சிங்கம்…
நம்பிக்கை உறுதிகளின் ஈமானிய அங்கம்…
கொள்கை மட்டுமே குறியாகக் கொண்ட
கொள்கை உறுதிகளின் தங்கம்…
எதிரிகளின் எந்தக் கெடுபிடிகளுக்கும்
அடங்காதவர்…
துப்பாக்கி முனையில் கேட்டாலும்
சண்டாளம் எனும்
சமரச ஓலைகளுக்குள் மடங்காதவர்…
பாரசீகம் அன்றும் பேரரசுதான்…
தனியாக நின்று இன்றும்
வென்றிருக்கும் ஓரரசுதான்…
இஸ்லாமியச் சிற்றரசுகளுக்குள்
கம்பீரமாக நின்று காட்டும்
ஒற்றைப் பேரரசுதான்…
கூட்டிக் கொடுத்தும்
காட்டிக் கொடுத்தும்
உலகில் கோழைகள்
பலர் வாழலாம்…
கொமேனி போன்ற வீரனுக்கு
என்றுமே மரணம் இல்லை..

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!