கவிதை

வாலண்டைனுக்கு வராத தமிழ்க் காதல்…

61views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
தமிழகத்தின் கீழடி
பழந்தமிழ் வரலாற்றை
எடுத்துச் சொல்லும்
மூத்த தமிழர்க் காலடி…
வெளிநாட்டுச் சாமியார்கள்
காதலர் தினம் கொண்டாடும் முன்பே
காளைகள் வழி
காதலர் தினம்
கொண்டாடிய நாகரீகம்…
அலங்கா நல்லூர்
தமிழகத்தின்
அலங்கார நல்லூர்…
உலகம் கண்டு வியக்கும்
ஆனந்த நல்லூர்…
தமிழரின்
இயற்கையோடு இயைந்த வாழ்வை
போற்றும் பொன்னூர்..
புகழூர்..
சங்கத்தமிழை முன்னிறுத்தும்
இது ஒரு
சந்தணத்தமிழ் முத்திரை…
தன்னை உயர்ந்தவனாகச் சொல்லும்
அந்தணனுக்கில்லா அக்கறை…
மங்கள மணத்தின்
ஈரத்தை வீரத்தைக் காட்டும்
மெய்த்திரை..
பொய்த்திரைகள்
புனைத் திரைகள் போடாமல்
கைத்திறைகள் காட்டாமல்
மணக்கப் போகும் காளையின்
கைத்திறத்தை…
சீறிவரும் காளையோடு மோதும்
காதலன் மெய்த்திறத்தைக் கண்டு
காதல் மணம் புரியும்
கனிவானக்
காதல் உரை…
தூக்கத்தில்…
ஏக்கத்தில்…
காதலியின்
கண் திரைபோடும்
கனவுத் திரை கழற்றும்
நனவுத் திரை…
காதல் இளம் பெண்ணாள்
மார் தழுவும் முன்னாலே
ஏறுதழுவுகிறான் இளங்காளை..
எப்போதும் தழுவுதல்
தமிழனுக்குத் தனி இன்பம்…
தழுவுதலில்
குற்றமில்லை குறையில்லை…
ஏறுதழுவுதல் –
வீரத்தின் இன்பம்…
தமிழ்க் காதலின்
முன்னோட்டம்..
மாடு வதையல்ல…
மார் வடுபட்டாலும்
மாடு வதை படாமல் காக்கும்
தமிழரின் மாறாத சரிதை..
ஏறுதழுவுதல்
இளம் காளையர்கள் மார்தழுவும்
மகத்தான பண்டிகை…
அங்கே காதல் ஈரமும் வாழும்
களத்தின் வீரமும் வாழும்…
இது வாலனண்டைனுக்கு முன்னே வந்த
தமிழரின்
பூர்வீகப் பண்டிகை…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!