கவிதை

உதிராத மலர்கள்

338views
புத்தம் புது பூமியில்
புதிதாய் பூத்த பூக்கள் பெண்கள்!
நித்தம் கவிதையில் சொன்னார்கள்!
அவர்களே நாட்டின்
கண்கள் என்றார்கள்!
இருட்டினில் வெளிச்சம்
தேடச் சொன்னார்கள்!
கல்லும் முள்ளும் நிறைந்த பாதையிலும்
கண்ணீருடன் புன்னகைப் பூக்களைப்
பறிக்கவும் சொன்னார்கள்!
வரதட்சணை கொடுமையிலும்
வாட்டியே கொன்றார்கள்!
நீதி தேவதை கண்களைக் கட்டி
நீதியையும் வென்றார்கள்!
பெண்மை எனில் மென்மைதான்!
வலிகள் கடந்து வாழ்க்கையில் நல் வழி
அமைப்பவர்கள்!
பெண்களை நீங்கள்
நாளும் போற்ற வேண்டாம்!
தூற்றாமல் இருந்தாலே
போதும்!
நள்ளிரவிலும் பெண்கள் பூமியில்
சுதந்திரமாக நடமாடும்
நாட்கள் வேண்டும்!
அன்று பகலிலும்
நிலாக்கள் தோன்றும்!
உதிராமல் மலர்கள்
செடியில் பல நாட்கள்
வாழும்!
அன்பைக் காட்டும்
இடங்களில் பெண்மை
என்றும் தலைத்து வாழும்!
பெண்களின் வாழ்க்கை என்று தான்
துன்பத்தில் இருந்து மீளும்!
கவிதாகுமாரி
தாராபுரம்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!