158views
உரமானது
உதிர்ந்த சருகு…
மரமானது
எழுந்த விதை…
மலர்கள் மடிந்தாலும்
மலர்ந்தே சிரிக்கும்!
மேடு பள்ளம்
கொண்டதே வாழ்க்கை
சிரித்துக் கொண்டே
கடக்கிறது நதி
உப்புக் கடலில்
தப்பிப் பிழைத்தன மீன்கள்
மீனவனுக்கு வருத்தம்
ஓட்டை வலை
பட்டாம்பூச்சிகள்
பட்டினியால் ஏமாந்தது
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டுச்சுவற்றில்
சித்திரப் பூக்கள்
பச்சைப் புற்களை
இச்சையுடன் உண்ணுகிறது
கால்நடைகள்
கசாப்புக் கடையில்
நிறைவேறுகிறது
கடைசி ஆசை
மன்னிக்கக் கற்றுக் கொள்
மானுடம் அழகாகும்
வாழ்த்தக் கற்றுக் கொள்
வசந்தம் சொந்தமாகும்
மரத்தில் ஒட்டிக்கொண்டது
பட்டுப்பூச்சி
மனதைத் தொட்டுச் சென்றது
மெட்டுப் பாடும் தென்றல்
இருக்கும் வரையில்
இரக்கம் கொள்
இறக்கும் வரையில்
அன்பால் வெல்வோம்
– கவிதாகுமாரி
add a comment






