கவிதை

ஆரியக்கூத்து…

107views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
ஆன்மீகம் என்பது
இணக்கத்திற்கு அறிகுறி
அதை பிணக்கமாக மற்றும்
காரியப் பூசைகளில்
கருத்தாய் இருப்பவர்கள்
ஆரியக்கூத்தை மீண்டும்
அரங்கேற்றப் பார்க்கிறார்கள்…
அயோத்தியோடு
முடித்து விடாமல்
இப்போது
குன்றத்து முருகனையும்
குறி வைக்கிறார்கள்…
குமரன் பக்கத்தில் இருக்கும்
தர்கா சிக்கந்தருக்கும்
புதுக்கதைகள் புனைகிறார்கள்…
தீபங்கள் வெளிச்சத்துக்காகத்தான்
இவர்களோ
தீபங்களைக் கொண்டு
ஒற்றுமைச் சமுதாய
ஒளியைக் குருடாக்கி
இருள் கொண்டு
நிரப்ப முயல்கிறார்கள்…
இந்து முஸ்லிம் இரத்தத்தை
ஒட்டப் பார்க்கிறார்கள்…
அறுசுவை உணவு காய்கறியோடு
குன்றத்து மக்களுக்குப் பிடித்தது
தர்கா வாசல் ஆட்டுக்கறிதான்…
இவர்களோ
அவர்களின் ஒற்றுமை தகர்த்து
மனிதக்கறி பரிமாற விரும்புகிறார்கள்…
நீதி தேவதையின் கண்கள்
கட்டப்பட்டிருக்கின்றன என்றுதான்
கருதி இருந்தோம் இப்போது
நல்லது கெட்டது அறியாத
ஒரு காட்டுமிராண்டி அதன்
கண்கட்டை அவிழ்த்து இருக்கிறான்…
டிசம்பர் ஆறின்
இரத்த ஆறு
காய்வதற்கு முன் டிசம்பர் மூன்றையும்
குறி வைக்கிறார்கள்…
அன்று ஆரிய மாயையை எதிர்த்துக்
குரல் கொடுத்தவர்கள்
அண்ணாவும் கலைஞரும்…
இன்று குரல் கொடுப்பதோடு மட்டுமின்றி
இரும்புக்கரங்கொண்டு
அந்தக் கொடியவரை அடக்குபவர்
கலைஞர் வாரிசு
தளபதி முதல்வர்…
ஒரு சின்ன வித்தியாசம்தான்
டிசம்பர் ஆறு
பள்ளிவாசலை இடிப்பதற்காக
அன்று ஒரு முதல்வர்
நீதிமன்றத்தை மீறினார்
இன்று ஒரு தர்கா வாசலைக்
காப்பதற்காக நம் முதல்வர்
நீதிமன்றத்தை மீறுகிறார்…
சின்ன இழைதான்…
நீதி கேட்டு முழங்கிய
மண் இது
சாதிக்கேட்டில் விழுமா
சண்டாளர் கை வருமா…?

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!