கவிதை

என் சிந்தை கவர்ந்த விந்தை பெண்

129views
வீரப்பெண்ணே !
வேலு நாச்சியின் படையின்
சாதனைப்பெண்ணே
குயிலி என்பதுவாம் உன் பெயர்
“புலி” என்பேன் நான்…
எத்தனை நெஞ்சுரம் அம்மா உனக்கு
நவாபும், வெள்ளையனும் படையுடன் சூழ்ந்திருக்க
பூ சூடி விளக்கேற்ற செல்வது போல்-உன்
பூந்தேகம்
அதையே விளக்காக்கி
வெள்ளையன் ஆயுதக்கிடங்கை
தீக்கரையாக்கி…நீயும் தீயோடு தீயாய்
தீப ஒளியானாய்
வெற்றிவேல் வீரவேல் என உன் குரலொலி
கலந்தது கருமேகத்தோடு….
கலங்கியது கண்ணம்மா என் கண்கள்
என் ஆசிரியர் பாடம் நடத்தியபோது
அன்று தொட்டு இன்றுவரை
என் சிந்தை கவர்ந்த
விந்தை பெண் நீயே…
அங்கம் துடிதுடிக்க-உன்
அந்நாக்கோ வீரமுழக்கமிட
தங்கத்தமிழ் நாட்டுக்கு
தேடி தந்தாய் வெற்றி…
முதல் பெண் போராளியே வாழ்க உன் வீரம்…
வெல்க உன் விசுவாசம்…
ஸ்டெல்லா J .R.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!