104views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
எங்கெல்லாம்
விடுதலை வேட்கைக்கான
சங்கீதம் இசைக்கப் படுகிறதோ…
எங்கெல்லாம்
அடிமை முறைக்கான
அபயப் பத்திரங்கள்
கிழிக்கப்படுகின்றனவோ
எங்கெல்லாம்
மாதர் உரிமைகள்
மறுக்கப்படுகின்றனவோ
எங்கெல்லாம்
தொழிலாளர் நன்மைகள்
நசுக்கப்படுகின்றனவோ
அங்கெல்லாம் அங்கெல்லாம்…
அவ்வப்போது நடக்கும்
பூமி அதிர்வுகளின்
மற்றொரு பெயர்தான் புரட்சிகள்…
போக்கிரிப் புல்லர்களின்
பொல்லாங்குகள்
மன்னிப்பதும்
அஹிம்சை காந்தியின்
இன்னொரு அறம்தான்…
கவாய்….
காந்தி கனவு கண்ட
கிராமியக் கடவுளின் குழந்தை…
தீட்டுகளும் தீண்டாமைகளும்
நடைமுறை வழக்குகள்
மாறிவிட்டாலும்
சூட்டுகளும் கோட்டுகளும்
மேனிகளில் ஏறிவிட்டாலும்
வளர்ந்த இந்த
இருபதாம் நூற்றாண்டிலும்
இன்னும்
பொறுத்துக் கொள்ள முடியாத
மேலாண்மை வர்க்கத்தின்
செருப்பு வீச்சுக்கள்
நீதிமன்றங்களையும்
நிலைகுலையச் செய்யும்…
வர்ணாசிரம
வகுப்புகளின் வீரியம்…
செத்த மொழிகளின்
தேவலோக பரி பாஷைகள்…
காண முடியாத
சிலைக் கடவுளே
கனவில் வந்து
செருப்பு வீசச் சொன்ன
சின்னத்தனம்…
ஹவாய் கடற்கரைகளிலும்
நடக்கும் சிறப்பு பெற்றக் கவாய்களுக்கு
ஹவாயும்
கால் செருப்பும் ஒன்றுதான்…
என்றும் வென்று காட்டும்
திராவிடம் நின்று தான்…
தண்டிக்கும் சட்டம் இருந்தும்
தண்டிக்காதப் பெரியார்
நீதிமன்றம் காணாத அரியார்…
சொன்ன வார்த்தைகள்
நல்ல மனிதருக்குச் சுடும்..
விட்டு விடுங்கள் அவனை…
மனம் செத்தவன்
உயிரோடு இருக்கும் பிணம்…
அன்று
பெரியாருக்கும் நடந்ததே…
add a comment






