கவிதை

அமைதி திரும்பும் காசா…

109views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
காசா
கண்ணியப் பூந்தோட்டம்…
அதன் நறுமணம்
பக்கத்து தேசங்களுக்கும் பரிச்சயம்…
நாசா எனும் வடிவில்
நாசகாரர் வந்து
பாசக்கார வேடமிட்டு
கைகுலுக்கும் வரை
நசித்துப் போனதில்லை
அதன் மானுட மகத்துவ நேசம்..
இயற்கை ஊறுகளால்
உடையா நகரம்…
மற்றவருக்கு வாரி வழங்குவதில்
சடையா நகரம்…
ஆனால்
நல்லவரோடு மட்டுமே
தற்கு நட்பதிகம்…
சண்டாளர்கள்
என்று தெரியாமல்
உறவு பேசி வந்த யூதர்கள்
இப்படி அபகரிக்கும்
வரை அவர்களுக்கும்
கை கொடுத்துக் கொண்டே தான்
இருந்தது இந்த தேசத்தின் நட்புறவுகரம்…
ஓங்கு மலை வளம் சுரண்டி…
ஒவ்வொருவர் வீடுகளும் பிடுங்கி…
உறுபொருள் உறையுள்
உடைகளும் பிடுங்கி…
நடுவீதிக்கு அவர்களைக்
கொண்டு வந்து நிறுத்திய பிறகு தான்
இந்தக் கொடுங்கோலர்களின்
கொடுமணம் உலகுக்குத் தெரிந்தது…
ஓரளவு சுதாரிக்கு முன்பே
எல்லாம் கைநழுவிப் போனது…
சமாதானம் பேசுகிறோம்
என்று வந்த சண்டாளர்களும்
சமாதானத்தையே
சமாதியாக்கினார்கள்
நிராயுதபாணிகளை
பெண்களை முதியவர்களை குழந்தைகளை
நோய் பயனாளர்களை
மற்றவரை என்று
தொட்டுப் பார்த்தும்
சுட்டுப் பார்த்தும்
மனிதக்கறி சுவைத்துப் பார்த்தும்
ஆறுதல் கொண்டது
நேதன் யாகுவின் பேய் மன நேயம்…
ஆயுதங்கள் குறையும்போதெல்லாம்
கொடுத்துக் கெடுத்தே
இனிமை கண்டது
அமெரிக்க வல்லரக்கம்…
ஆயுதங்கள் அற்ற
அனாதைகளாய் கற்களோடும்
உணவுப் பச்சிலை புற்களோடும்
இருந்தாலும்
ஈமானிய நம்பிக்கை
சற்றும் இழக்காமலே
எதிர் நின்றனர் பாலஸ்தீனத்தின்
பரம சாதுக்கள்…
ஏதோ ஒரு வகையில் இப்போதேனும்
சற்றே நிம்மதி பிறந்திருக்கிறது
வேடிக்கை பார்த்தவர்களும்
தூண்டி விட்டவர்களும்
சோர்ந்து விட்ட வேளைகளில்
கொஞ்சமேனும் சுகப்பட்டிருக்கிறது காசா..
அமைதி ஒப்பந்தம் எனும்
நிம்மதி அவர்களுடைய
ரண நெஞ்சங்களை நீவி விட்டிருக்கிறது…
ஓயாது பொழிந்த குண்டுகள்
ஓய்வெடுக்கின்றன…
சாயாது வீசப்பட்ட ஓவுகணைகள் சாத்தி
வைக்கப்படுகின்றன…
காசா கொஞ்சம் கொஞ்சமாக
மெல்ல மெல்ல அமைதியை
நோக்கித் திரும்புகிறது…
நோய்களால் முடக்கப்பட்டவர்களும்
வீடுகள் இடிக்கப்பட்டவர்களும்
உணவு தடுக்கப்பட்டவர்களும்
ஆசுவாசப் பெருமூச்சுகளால் ஆனந்தம் அடைகிறார்கள்…
வேற்று நிலம் தேடி
வெளியேறியக் கால்கள்
சொந்த நிலத்துக்கே திரும்பி வருகின்றன…
துப்பாக்கி ரவைகளால்
நனைத்து குற்றுயிராக்கப்பட்ட
வெள்ளைப் புறாக்கள்
சிறகுகளுக்கு நம்பிக்கை மருந்து தரப்படுகிறது…
அமைதி ஒப்பந்தம்
அவர்களுக்கு மட்டுமல்ல
உலகத்தில் அனைத்து
மனிதாபிமானிகள் நெஞ்சினிலும்
சாமரம் வீசுகிறது…
இனியேனும் சமாதானம்
அந்த தேச முழுவதும் சாத்தியப்படட்டும்…
போர் இல்லாமலே போகட்டும்…
மக்கள் மனங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!