108views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
ஆடு மாடு மேய்க்கும்
குழந்தைகள் மீதும்
மனம் கசிந்தவர்
பெருந்தலைவர்
ஒருவேளையேனும்
வயிற்றுப் பசி நீக்கிக்
கல்வி பசி ஆற்றியவர்…
திருக்குவளைத் திருவாய்
கலைஞர்வாய் -அதை
சரி உணவு முட்டையோடு
சத்துணவாக்கியது…
அந்த கருணை நதி
கழகத்துக்கும் தமிழகத்துக்கும்
தந்த நிதியோ
ஒரு வேளை உணவை
இரு வேளையாக்கியது…
ஆதரவற்றவர்
ஒடுக்கப்பட்டவருக்கு மட்டுமன்று
கல்வி அறிவாலயம்
வர விரும்பும் அனைவருக்கும்
வாசல் திறந்து வைத்த நேசன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் சீலன்…
மூன்று ஐந்து
எட்டாம் வகுப்புகளுக்கும்
பொதுத்தேர்வுகள் வைத்து
பள்ளிக் குழந்தைகள்
மூச்சுக் குழல் முறியச் செய்து
மூளைக்காய்ச்சல் வரச்செய்ய
சதித்திட்டம் தீட்டிய
மூடர்களின் சதியழித்து…
கல்வி அனைவருக்கும் என்றாக்கி
அதை இலவசமாக்கி
சீருடை அணிவித்து
சிங்காரித்து…
தாயாகி தந்தையாகி ஆசிரியனாகி
தலைவனும் ஆகிய
ஒரு தயாள சினேகன்…
இனி இங்கு மலரும்
எல்லா பூக்களிலும்
திராவிட வாசம்…
அது தெருவெங்கும்
சேரிகள் எங்கும்
தினமலர்ந்து கூட்டும்
பகுத்தறிவு வாசம்…
மேலேணிகள் எனும்
நூலேணிகளை
அதுவே இனி சரி செய்யும்…
ஏற முடியாத உயரங்களுக்கும்
இந்தத் திராவிடத்
தலை மணிகளின்
கால்கள் ஏறும்…
கல்வித் தடை
வழுக்குப் பாறைகள் உடைத்து
நீட்டுகளின் சங்கிலிகள்
தளையறுத்து
தாயுமாகிப் பாலூட்டியவனின்
அன்பு முத்தங்களும்
அரவணைப்புகளும்
இவர்களுக்கு என்றும் உண்டு…
மழையொழுகும்
வீடுகள் மாற்றி
அன்பு மனமொழுகும்
புது வீடுகள் கட்டித் தரும்…
அரசுப் பதவிகளில்
அவர்களை அமர வைத்து
அரியாசனங்களோடு
சரியாசனங்கள் செய்யும்…
அதை சரியாமல்
சரியாகச் செய்யும்…
கல்வி சிறந்த தமிழ்நாட்டின்
இந்த இளைய தலைமுறை
இனி இந்தியாவுக்கே வழிகாட்டும்…
add a comment






