107views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மனிதர்கள்
மனிதர்களை மதிக்கிறார்கள்…
நாய்கள் நாய்களை…
சில சொறி நாய்கள்
வெறி நாய்களை
நேசிக்கின்றன..
அம்மா அப்பாவுக்கு
வயதான காலத்தில்
சோறூட்டாதவன் எல்லாம்
நாய்களுக்கு ஊட்டி
வெறியூட்டுகிறான்…
அதனால்
எத்தனை எத்தனை
உயிர்கள் இழப்புகள்..
குழந்தைகள் பெண்கள்
பெரியவர்கள் முதியவர்கள்
காயம் பட்டாலும்…
கடிபட்டாலும்…
கல்லறை வாய் பட்டாலும்
கவலை இல்லை…
மிருக நேசிப்பாளர்களாம்…
மானுடம்
நேசிப்பதை விடவா
இந்த நாயினம்
நேசிப்பது சிறந்தது?
மனிதன்
விளையாடுவதற்கு என்று
சில விலங்குகள் உண்டு
களமாடுவதற்கு என்றும்..
வளர்ப்பதற்கு என்றும் உண்டு…
வேட்டைக்கென்றும்
கோட்டைக்கென்றும் உண்டு…
மன்னர் கோட்டைகள்
யானைகளின்
வளர்ப்புத் தளங்கள்…
புரவிகளின் வளர்ப்புகள்
மன்னர்கள்
அரண்மனைத் தோட்டங்கள்…
நாய்கள் வேட்டைப் பிராணிகள்…
வளர்ப்புப் பிராணிகளன்று…
நன்றி இருக்கலாம்..
நன்றியை விடவும்
மேலான நச்சு இருக்கிறது
அதன் நாவில்…
சுரந்து கொண்டே இருக்கும்
உமிழ் நீர் வாயில்…
கண்டு சொல்லுகிறது
ஆய்வியல்…
எத்தனை முறை
கழுவினாலும் போகாத
அதன் வீரிய விஷத்தன்மையை
மண்ணைக் கொண்டே
சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது…
எல்லா விலங்குகளோடும்
மனிதர்கள் இணங்குவதில்லை
அடிக்கடி பிணங்குவற்றுக்கு
இணங்குதல் சரியில்லை…
ஆடு மாடுகள்
ஆபத்தில்லாதவை
அன்றாடம் மனிதரோடு
வளைய வருபவை…
ஒட்டகையும் மானும்
அரபுகளின் தேசங்களில்
வளர்ப்புப் பிராணிகள்…
இங்கே
மான் வளர்த்தால் குற்றம்…
இப்போது காளை மாடு
வளர்த்தாலும் குற்றம்…
அதன் கொம்பொடித்து
குற்றுயிராக்க
பீட்டாக்கள் எனும்
துப்பாக்கி குண்டுத் தோட்டாக்கள்
தயாராக இருக்கின்றன…
ஆனைகள் காடுகள் அபகரித்து
ஆட்டங்கள் போடும்
கஞ்சாச்சாமிகளைக்
கேட்க வக்கற்றவர்கள்
அப்பாவி மனிதனை
கொன்று குவிக்கும்
நாய்களுக்காக
நாக்குகளைத் தீட்டுகிறார்கள்…
தமிழனின்
பூர்வீகக் கலாச்சார
பொங்கல் கரிக்கவும்
ஏறு தழுவல்கள் எனும்
பூர்வீக தமிழ் பண்பாட்டின்
கூறு சிதைக்கவும் சீறிவரும்
மாடுகளின் சீற்றங்கள் விட
வேகமாகச் சீறி வருகிறார்கள்…
அதன் வழி ஒரு கலாச்சாரத்தையே
முறிக்கும் மூடத்தனமான
காரியத்தை முயல்கிறார்கள்…
முறுக்கி இழுத்து
கட்டப்பட்ட மாடுகளின்
மூக்கணாங் கயறுகளை
மூர்க்கமான சில
மெலிந்த நூலிழைகள்
முறிக்கப் பார்க்கின்றன…
அதேபோலத்தான்
அடுத்தவர் உயிருக்கு
ஆபத்து விளைவிக்கும்
நாய்களுக்காகவும்
சில நாய்கள் குரைக்கின்றன…
விலங்குகள் விட
மனிதர் நன்மைகள்
நலமென்று
காட்டுதல் அவசியம்…
அன்றாடச் செய்திகளின்
அவலங்களையும்
அவர்களுக்குச் சொல்லுதல்
அவசியம்….
இத்தனை இலட்சம் பேர்
இறப்புக்கு அந்த
நாய்க்கடி காரணம் என்பது
உலக அதிசயம் போல் ஒரு அதிசயம்…
அவற்றை காப்பகங்களில்
அடைப்பதால் எதுவும்
கடந்து போய் விடுவதில்லை…
அடைக்கக் கூடாது என்று
சொல்பவர்களை கடிபட்டு
செத்தவர்களின் அந்த
இரைச்சல் கூப்பாடுகள்
எழுப்பி விடுமா?
அப்படியும் அவர்கள்
இதயங்களைத் தட்டி
எழுப்பவில்லை என்றால்
இந்த இரண்டு கால் நாய்களையும்
காப்பகங்களில் அடைப்பது அவசியம்…
உலகம்
மானுட
வாழ்வியலுக்குத்தான்
பீட்டாக்களுக்காக அல்ல….
add a comment






