125views
கடிகாரம் ஓடுமுன் ஓடு என்பார்கள்
சுறுசுறுப்பாய் இரு என்பதற்கு
இருபத்தி நான்கு மணிநேரமும் சுற்றும்
உனக்கு ஓய்வென்பது எப்போது? சோர்வு வராதா?
உனக்குப் பேட்டரிப் போட்டு விட்டால் முற்களால்
சுற்றி சுற்றி வந்து வாழ்க்கையின் நேரம் குறைவதை
புரியாமல் புரியவைப்பாய்
புதிரானவன் தான்
போய்விட்ட நொடியை மீட்டெடுக்க முடிவதில்லை
வருகின்ற நொடியை தள்ளிவைக்க தகுதியில்லை
குறைத்தோக் கூட்டியோ வைத்தாலும் உன்
இயக்கம் தடைபட்டதாய் சரித்திரமே இல்லை
இந்த நொடிதான் நமதென்பது தத்துவம்
புரிந்தவர்கள் தெரிந்து கொண்டு வாழ்வார்கள்
தெரிந்தவர்கள் தெளிந்து உணர்ந்து உயர்வார்கள்
வாழ்க்கையின் ஓட்டம் தெரிந்து
வளம்பெருக வாழ்ந்திடு
ஒன்று முதல் பன்னிரண்டும் இடம் பெயர்வதில்லை
நொடியும் நிமிடமும் மணியும் வளைந்து கொடுப்பதில்லை
சுவர்க்கடிகாரம் கைக்கடிகாரம் எதுவாயினும்
காலத்தை அறிந்து சொல்லும் காலனின் வருகை வரை
வி.பிரபாவதி
மடிப்பாக்கம்
add a comment






