கவிதை

இறை வழியில் இனிய தியாகம்

192views
இறை வழியில் அமைதி தோன்றலாம்
ஈகையும் உயர்த்தும் உயிரின்
தென்றலாம்
உவகையும் பெருக்கும் உழைப்பின்
பயனதாம்
ஊமையும் பேசும் மௌனக் கதறலாம்
எத்திசையும் ஒலிக்கும் இன்பம்
தீண்டலாம்
ஏற்றம் தரும் வாழ்வின் ஏணியாம்
ஐயம் இன்றியே மனத்தின் தெளிவாம்
ஒற்றுமை உணர்வும் இனத்தின்
சக்தியாம்
ஓங்கும் புகழால் உள்ளக் கிளர்ச்சியாம்
அன்பே நிறையும் உறுதித் தன்மையாம்
ஆவதும் அழிவதும் எண்ணத்தின்
நோக்கமாம்
இயல்பாய் போகுமே இனிய தியாகம்
கவிஞர். சிவ நடராஜன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!