104views
அத்தாவுல்லா நாகர்கோவில்
உலகத்தை அண்ணாந்து
பார்க்க வைத்த இவர்
ஓர் ஆச்சரியக் குறி…
பாரசீகப் பேரரசின்
பொத்தி வைத்த பூகம்பம்..
இருந்த இடத்தில்
இருந்து கொண்டே
இஸ்ரேலை உண்டு இல்லை
என்று ஆக்கிய ஈரானிய
வீர ஏவுகணை….
அதிகம் பேசாமலே
அக்கினிக் குழம்பாய்
சீறிவெடித்த
ஆகாய எரிமலைக் குழம்பு…
எப்படி என்று இன்னும்
உலகம் விழிவிரியப் பார்க்கும்
விடை தெரியாத கேள்வி…
ஆயத்துல்லா அலி கொமேனி…
அருளாளன் அருள்பெற்ற இறைநேசர்…
நாகரீக ஆடைகள் போர்த்திய நாட்டுப்புற *சூஃபி…
தாடி கோதிக்கொண்டே எதிரிகளின்
நாடி நரம்புகளில்
பயம் பூட்டிய பரம சாது…
ஒவ்வொரு கணமும்
உயிர்த்துக் கொண்டே இருந்த
பிரம்மாஸ்திரப் போராயுதம்…
ஆதரவற்றவர்க் குரலாய்
உரத்து முழங்கிய
விடுதலை பீரங்கி…
தானுண்டு நாடுண்டு
என்று இருந்தவரை
உசுப்பி விட்ட
ஏகாதிபத்திய மேடுகளை
வானூண்டு ஏவுகணை உண்டு
என்று போட்டுத் தாக்கிய
புது நவீன புல்டோசர்…
எதிரிகள்
ஏகாதிபத்தியத் தொண்டை குழிகளுக்குள்
துப்பாக்கிச் செருகிய
*கர்பலா களக்காரர்..
கொமேனி
தளர்ந்த நடைகளுக்குள்
தளராத நெஞ்சூக்கம்…
முதிர்ந்த தோற்றத்திற்குள்
மூடர்களின்
முனை முறியச் செய்யும்
அற்புதப் போர் வியூகம்….
நாசாக்களும் சேர்ந்து
நாசம் செய்த காசாக்களின்
கண்ணீர் துடைத்த ஆறுதல்…
கையில் இருப்பது கைத்தடி அல்ல…
மூசா நபிகளின்
இன்னொரு *அசா…
எப்போதெல்லாம்
தர்மத்தின் கண்களில்
திரை போடப்படுகிறதோ
அப்போதெல்லாம்…
அங்கெல்லாம்….
எச்சரிக்கை….
எப்போது வேண்டுமானாலும்
ஓர் ஆயத்துல்லா கொமேனி
எழுந்து வரலாம்
கண்ணனாக அல்ல…
ஆதரவற்றவர்களின் அண்ணனாக…
ஆயத்துல்லா அலி கொமேனி…
மரணபயம் இல்லாத மாவீரன்…
எனவே சரித்திரத்தில்
இனி அவர் யாராலும்
சாகடிக்க முடியாத
ஒரு மாவீரன்…
*
சூபி… இறைஞானி
அசா…. கைத்தடி
கர்பலா… இஸ்லாமிய வரலாற்றுப் போர்க்களம்…
add a comment






