கவிதை

இறப்புக்குத் துணிந்தவர்களை ஏவுகணைகள் என்ன செய்யும்?

107views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மனிதனுக்கு மனிதன்
உதவுவது கூடாது என்று
எந்த தர்மமும் போதிக்கவில்லை…
நாடற்ற அகதிகளுக்கு
ஆதரவளிப்பதும்..
வயிற்றுப் பசியோடு இருப்பவனுக்கு
வயிறார உணவு தருவதும்…
வீடிழந்தவருக்குக்
குடியிருப்புகளை வழங்குவதும்
அரபுகளின் குபேர தர்மங்கள் …
ஈர இரக்க மனமுள்ளவர்களின்
வரலாற்று நிகழ்வுகள்…
அன்று நாசாக்களே
புறக்கணித்த நாசகாரர்களை
காசாக்கள் கையேற்றுக்
கனிவு காட்டியது…
ஜெர்மனியின் ஹிட்லர்
கொன்றுவித்தக்
குள்ளநரிகளை மதினத்து
அன்சாரிகளின்
ரத்தத் துளிகள்
பாலூட்டி உயிர்ப்பித்தது…
பதிலுக்கு நன்றி யுணர்வாய்
ரத்தக் காணிக்கைகளையே
இஸ்ரேல் நாளுக்கு நாள்
விதைத்தது….
பாலஸ்தீனத்தின்
பாலை மணல் எங்கும்
ரத்தத் துளிகள்…
பச்சைப் புல்வெளிகளில்
பசுங் குழந்தைகளின் ஈரக்குலைகள்….
காரணமில்லாமலே
ஏவுகணைகளின் வாய்களில்
சாவுகளாய் விழுந்த
பெண்கள் பெரியோர்
ஆதரவற்றோர் குரல்களை
வானம் எழுதி வைத்தது
பூமி சாட்சியம் சொன்னது…
வல்லரக்க ஓநாய்கள்
வாய் பிளந்து
ரசித்து வேடிக்கை பார்த்த
உயிர் பறிப்பு யுத்தங்களின்
சத்தங்களை
ஆயத்துல்லா அலி கொமேனிகளின்
காதுகளில் காலம் போட்டது…
ஈரானிய முஸ்லிம்கள்
இறப்பை நேசிப்பவர்கள்…
ஏவுகணைகளுக்கு
அவர்கள் அஞ்சுவதில்லை…
காலம்
ஓர் அற்புதமான
ஆயுதம்…
எதை எப்போது
எப்படிப் புரட்டும்
என்று யாருக்கும் தெரியாது…
சும்மா இருந்தவர்களைத் தீண்டி
இன்று நெருப்பில்
காய்கிறது இஸ்ரேல்.
அன்று முற்பகலில் காசா
இன்று பிற்பகலில் இஸ்ரேல்…
ஆயத்துல்லா அலி கொமேனி
காலம் அனுப்பிய தருமக் கருணன்…
ஈரான் அனுப்பிய
நெருப்பு பாலஸ்தீனியப்
பத்தினிக் கண்ணகிகளின் கற்பு…
மூத்தோர் குழவி
பெண்கள் நீங்கலாக
தீத்திறத்தார் பக்கமே
இந்த ஏவுகணைத் தீ சேர்க…
இஸ்ரேல் முற்றிலும் இல்லாதாக…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!