23views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
மக்களின் அறியாமை விரட்ட….
அநீதிகள் அழிய..
அராஜகங்கள் ஒழிய…
தொழிலாளிகளின்
சுய தேவைகள் நிறைவடைய…
இளைஞர்கள் வாழ்க்கை
முன்னேற…
முதியவர்கள் வாழ்வில்
மகிழ்ச்சி பெற…
முடை நாற்றக் கொள்கைகள்
மண்ணுக்குள் புதையுற…
இல்லாமை இல்லை என்றாக….
நாட்டு நலிவுகள் நீங்க…
கொடு நோய்கள் மறைய…
சாதி மத பேதங்கள் நீங்க…
மதமாச்சரியங்கள்
மாண்டு போக…
அக்கிரமக் காரர்கள் அழிவுற….
சமத்துவச் சமுதாயம் மலர…
எல்லோரும்
எல்லா நலன்களும்
பெற்று வாழ…
மானுடம் மலர….
மனிதாபிமானம் போற்றப்பட…
நல்லவர் கைகளில்
நாடு வர..
நாட்டு மக்கள் அனைவரும்
நலம்பெற…
களவாடப்பட்ட
இருண்ட இந்திய தேசம்
மீண்டும் ஒளிபெற….
விளக்கேற்றுவோம்….
நம் இல்லங்களில்…
நல்லவர் உள்ளங்களில்…
விளக்கேற்றுவோம்…
அந்திப் பொழுதுகளிலேயே…
ஆனந்தமாகவே….
என்று பாடிய நிலை ஒன்று
இருந்தது அந்நாளில்…
இப்போது விளக்குகளை
அணையுங்கள் என்று வேண்டுகிறார்கள்…
இந்த நிலை
அப்போதில்லை …
மேகம் கருக்கிறது
மழை வரும் போலிருக்கிறது
என்ற நிலை மாறி
இப்போதெல்லாம்
வானம் கருத்தால்
போர்மேகம் என்கிறது
இன்றைய வானிலை…
மழை வருகிறதோ இல்லையோ
மழைபோல
குண்டுகள் பொழிகிறது …
எப்படி இருந்தாலும்
எங்கோ ஓர் உயிர் போய்க்கொண்டே
தான் இருக்கிறது….
படித்துக்கொண்டிருக்கும்
குழந்தை கேட்கிறாள்…
விளக்கேற்றவா
விளக்கணைக்க வா….
add a comment