கவிதை

ருத்ர தாண்டவம்

178views
பிரம்மா படைப்புக் கடவுள்
மகா விஷ்ணு காக்கும் கடவுள்
சிவன் முக்தி கொடுக்கும் கடவுள்
தர்மங்கள் சிதையும்போது
அவதாரம் எடுப்பேன் என்றான்
கண்ணன் கீதையில்!
கலியுகத்தில் தர்மம் இல்லை!
பாவங்கள் நிரம்பிப் பெருக்கெடுக்கின்றன
பொய்,வஞ்சகம்,சூது , திருட்டு
என்று எதிலும் குறைவில்லை!
தலைவிரித்தாடுகிறது அதர்மம்!
கடவுள் நம்பிக்கையும் காலாவதியாகும்
இந்தக் காலத்தில்—-
கொரானா வடிவில் ஒரு அவதாரம்!
இதன் வடிவைக் காணும்போது
ருத்திராக்ஷம் நினைவு நிழலாடுகிறது!
சிவபெருமானின் ஆபரணம்!
இந்த வடிவில் ஒரு ருத்ர தாண்டவம்!
ஏழை,பணக்காரன் வேறுபாடு இதற்கில்லை!
இந்த மரண ஓலத்திலும் கொள்ளையடிக்க
இதயமற்ற ஒரு கூட்டம்! பாவத்தின் உச்சம்!
இந்த நிலை நாளைக்கு உனக்கும் வரலாம்
என்கிற நினைவேயில்லை!
பணவெறி கண்களைக் குருடாக்குகிறது!
ருத்ர தாண்டவம் அரங்கேறிவிட்டது!
உயிர்கொல்லி கொரானா வடிவில்!
இந்தப் போரில் அப்பாவி அரவான்களும்
களபலியாகின்றனரே என்பதுதான்வேதனை!
இது எங்கே? எப்போது முடியும்?
என்கிற கவலையோடுசெய்வதறியாமல்
காத்திருக்கிறான் பாமரன்!
ஜெயா வெங்கட்ராமன்
பெங்களூரு

Right Click & View Source is disabled.

error: Content is protected !!