தமிழகம்

காட்பாடியில் பிறந்தநாள் விழாவில் கத்தியால் கேக் வெட்டிய 2 பேர் கைது

32views
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தனியார் ஓட்டல் எதிரில் கடந்த 11-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் அந்த ஓட்டலில் பணிபுரியும் பரமக்குடியை சேர்ந்த பூவரசன் (25) பிறந்தநாளை கொண்டாட, காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த சிவா (21) ஏற்பாட்டில் ஓட்டலில் உள்ள கத்தியை கொண்டு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.  வேலூர் எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவுப்படி காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பூவரசன், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!