தமிழகம்

காட்பாடி 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் குவா ! குவா !!

9views
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்தவர் கிரிராஜ், இவரது மனைவி பேபி (33). நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது, இதனையெடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். அப்போது பேபிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ரேவதி, ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அதில் அவருக்கு அடுத்தடுத்து 2 அழகான பெண் குழந்தைகள் பிறந்தன. பின்பு தாயும் சேயும் பத்திரமாக வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துதுமனையில் சேர்த்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!