தமிழகம்

காட்பாடி மேல்பாடி அருகே ஓடும் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு, பெண் குழந்தை குவா ! குவா !!

8views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மாதாண்டகுப்பத்தை சேர்ந்த நாகராஜின் மனைவி பிரீத்தி (26), நிறைமாத கர்ப்பிணியான அவரை பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து சென்றபோது மேல்பாடியில் பிரசவ வலி ஏற்பட்டது.  உடனே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு அதில் பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரகாஷ், பிரசவம் பார்த்தார்.அவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது.  பின் தாய், குழந்தையை வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரும் நலமாக உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!