தமிழகம்

காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பலதுறை உயர் சிறப்பு மருத்துவ முகாம் ஏராளமான மக்கள் பயன்பெற்றனர்

130views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புமருத்துவ துறைசார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் பல துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார். இதில் இருதய நோய், பொது மருத்துவ சுகாதார பிரிவு, தொற்றுநோய் சிகிச்சை பிரிவு, பல்மருத்துவ பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு. கண், காசநோய், காது, மூக்கு, தொண்டை, எலும்பு, சித்தா, நுரையீரல் பிரிவு என பல பிரிவுகளில் மருத்துவர்கள், நோயாளிகளை பரிசோதித்து, மருத்து, மாத்திரைகளை வழங்கினார். பஞ்சாயத்து தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த முகாமில், காட்பாடி ஒன்றிய குழுத் துணைத்தலைவர் சரவணன், கரசமங்கலம் பஞ்சாயத்து தலைவர் ஸ்டாலின், முன்னாள் தலைவர் தமிழரசி வெங்கடேசன், புதிய பாரதம் அமைப்புசாரா கட்டிடசங்க நிறுவுனர் வேல்முருகன், மருத்துவர்கள், பணியாளர்கள், கிராம தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என தரப்பினர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!