தமிழகம்

பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம்

126views
ராமநாதபுரம், அக்.27- சர்வதேச பெண்கள் அமைப்பான ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு உடல் மற்றும் மனநலம் சார்ந்த கருத்தரங்கம் நேஷனல் அகாடமி பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.
சங்கத்தலைவி கவிதா செந்தில்குமார் தலைமை வகித்து வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகளிடம் உரை ஆற்றினார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மதுரம் அரவிந்தராஜ் பேசினார். மாதவிடாய் கால சுகாதாரம் குறித்து டாக்டர் கனகப்பிரியா, மனநலம் குறித்த ஆலோசனைகளை டாக்டர் ரம்யபிரியா, ஊட்டச்சத்து மற்றும் ரத்த சோகை குறித்து டாக்டர் ராசிகா விழிப்புணர்வு உரை ஆற்றினார்.
பெண் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பருவ மாற்றங்கள் குறித்து டாக்டர் ஆயிஷதுல் நஸிதா விளக்கம் அளித்தார். ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட், ரோட்டரி கிளப் ஆப் ராம்நாட் ராயல்ஸ், ரோட்டரி கிளப் ஆப் ஈஸ்ட் கோஸ்ட் ராம்நாடு ஆகிய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்னர்.
ரோட்டரி சங்கத் தலைவர் பார்த்திபன், இன்னர்வீல் மாவட்ட முன்னாள் தலைவி லட்சுமிவர்தினி ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வதேச சமூக சேவை மாவட்ட அமைப்பாளர் கீதா தொகுத்து வழங்கினார். சங்க செயலர் ஹரிதா நன்றி கூறினார். ராமநாதபுரம் நகரில் உள்ள 12 பள்ளிகளில் இருந்து 13 வயது முதல் 17 வயது மாணவிகள் 2,100 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நிருபர் : ஆர்.முருகன்,  ராமநாதபுரம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!