தமிழகம்

கிம்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மற்றும் செயற்குழு இயக்குனருக்கு கன்னியாகுமரியில் நடைபெற்ற புற்றுநோய் முகாமில் பாராட்டு

236views
கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் கேப் பொறியியல் கல்லூரி இணைந்து புற்றுநோய் தடுப்பு முகாம் சிறப்பாக நடத்தினார்கள்.நிகழ்ச்சிக்கு காவல்துறை ஆய்வாளர் திருமதி . கேத்தரின் சுஜாதா முன்னிலை வகித்தார். கேப் குழுமத்தின் துணை இயக்குனர் முனைவர் கார்த்திக் ஐயப்பன் தலைமை தாங்கினார் . கல்லூரி நிர்வாகி பொறியாளர் ரெனின் வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் . ஷேக், ரொட்டேரியன் தமிழ் செல்வி ,17-வது கன்னியாகுமரி வார்டு உறுப்பினர் திருமதி. ஆளிரோஸ் தாமஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமூக சேவகர்- பசுமை நாயகன். மருத்துவர். தி.கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) சிறப்பு விருந்தி விருந்தினராக கலந்து கொண்டு கூறியதாவது பெரும்பான்மையான போதை வஸ்துக்கள் புற்றுநோயை உருவாக்குவதற்கு காரணியாக இருக்கின்றது எனவே அதை நாமும் தவிர்த்து பிறரையும் தவிர்க்கச் செய்ய வேண்டும். புற்று நோயின் தாக்குதலை ஆரம்ப காலகட்டத்திலே கண்டறிய வேண்டும். ஹெச். பி. வி தடுப்பு ஊசி ( கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு ஊசி 13- வயதிலிருந்து 19 -வயது வரை உள்ள மகளிர்க்கு ) தகுதி வாய்ந்த விருப்பமுள்ள மகளிர் தகுதி உள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெற்று போட்டுக் கொள்ளவும்.
மருத்துவர் தி .கோ. நாகேந்திரன் சமூக சேவகரின் வேண்டுகோளை ஏற்று சுமார் 3000-க்கு மதிப்புள்ள ஹெச் .பி. வி தடுப்பூசியை தகுதி உடைய விருப்பமுள்ள மங்கையர்களுக்கு முற்றிலும் இலவசமாக வரும் நாட்களில் நாகர்கோவில் தொடங்க இருக்கின்ற கிம்ஸ் மருத்துவமனையில் இடப்படும் என்பதை தனக்குத் தெரிவித்த கிம்ஸ் மருத்துவமனையின் தலைவரும் செயற்குழு இயக்குனருமான மருத்துவர் எம்.ஐ. சகாதுல்லா அவர்களுக்கு தன் சார்பாகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சார்பாகவும் பயன்பெற போகும் பொதுமக்கள் சார்பாகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி தகுதி உள்ள மகளிர் இதை பயன்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தார்.கலந்து கொண்ட அனைவரும். கற்போம் கற்போம் புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கற்போம், கற்போம் கற்போம் ஹெச். பி. வி தடுப்பு ஊசியை பயன்படுத்த கற்போம், கற்போம் கற்போம் புற்றுநோயை உருவாக்கும் போதை வஸ்துகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கற்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

காந்தி மண்டபத்தின் முன்பிருந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு முக்கோணப் பூங்காவை சுற்றி பின்னர் காந்தி மண்டபத்தை வந்தடைந்தது வழிநெடுக உறுதி மொழி எடுத்துக் கொண்ட வாசகங்களை உரக்க கூறி வந்தனர். புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியின ஏற்பாடுகளை கேப் பொறியியல் கல்லூரி , போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு,திரு. தாமஸ் ,ஜெஸ்டர்ஸ் மில்டன் , பேரின்பராஜ், திருமதி. ராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!