தமிழகம்

கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழா

29views
கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தின் அருகாமையில் நடைபெற்ற திருவள்ளுவருக்கு வணக்கம் செலுத்தும் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கேப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், வள்ளுவரின் நெறியில் வழி நடப்போர் இணைந்து நீர்வளங்களை சுத்தப்படுத்தலின் அவசியத்தின் விழிப்புணர்வு திருக்குறளின் தொடர் பரப்புரை மற்றும் வள்ளுவனை உலகிற்கு தந்த குமரியின் பெருமையையும் எடுத்துரைக்கும் நிகழ்ச்சி சமூக சேவகர் மருத்துவர் .தி. கோ. நாகேந்திரன், தலைமையில் நடைபெற்றது.
பிஷப் பீட்டர் ரெமிஜியுஸ் ( முன்னாள் பேராயர் கோட்டாறு மறைமாவட்டம் ) முன்னிலையில் நடைபெற்றது . காந்தி மண்டப பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் தொடர்பு அலுவலர் திரு.. பா .ஜான் ஜெகத் பிரைட், திட்ட இயக்குனர் சா. பத்ஹி முகமது நசீர் ,உதவி திட்ட அலுவலர் பொன் குமார் ,வழக்கறிஞர் மில்லர், பி .எஸ். என் .கல்லூரி முதல்வர் முனைவர் செல்ல ராஜா, சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். கேப் பொறியியல் கல்லூரியின் நிர்வாக அதிகாரி பொறியாளர் ரெனின் வரவேற்புரை வழங்கினார். தமிழ் அறிஞர்களான பிள்ளையார் நயினார், சிவதாணு பிள்ளை ,மது பிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை ரம்யா ஜாய், திருநைனார்குறிச்சி ரத்தினதாஸ் , ரத்தினமணி ,சதீஷ் ,ப. இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். திருக்குறளின் பெருமையும், திருவள்ளுவரின் சிறப்பையும் , குமரியின் தென்மையையும் கலந்து கொண்ட அனைத்து அறிஞர் பெருமக்களும் எடுத்துரைத்தனர். தமிழ் அறிஞர் இளங்கோ அவர்கள் பேசுகையில் தமிழுக்கும் குமரிக்கும் பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் வள்ளுவன் புகழ் பாடிய பன்முகப் புலவர் கவிமணிக்கு கன்னியாகுமரியில் உள்ள கவிமணி பேருந்து நிலையத்தில் கவிமணியின் திருஉருவச் சிலை உடனடியாக நிறுவுவதற்கும் கன்னியாகுமரியில் இருந்து வள்ளுவன் பிறந்த திருநைனார் குறிச்சிக்கு பேருந்து வசதியும் உடனடியாக தமிழக அரசும் தமிழக முதல்வரும் செய்வது குமரி மண்ணுக்கு செய்யும் சிறப்பாகும் என தன் சார்பாகவும் தமிழ் அறிஞர்கள் சார்பாக கோரிக்கை வைத்தார் .

முறையே மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பா. ஜான் ஜெகத் பிரைட் தொழிலாளர்களுக்கு புத்தாடைகளையும், திட்ட இயக்குனர் ஜனாப். சா. முகமது நசீர் திருக்குறள் நூல்களையும், வழக்கறிஞர். மில்லர் மரக்கன்றுகளை மாணவ மாணவிகளுக்கு கொடுத்து அன்பளிப்பு படலத்தை தொடங்கி வைத்தனர் .கடற்கரை ஓரம் அமைந்துள்ள முக்கோண பூங்காவை சுற்றி ஊர்வலமாக கற்போம் கற்போம் திருவள்ளுவரின் அறநெறியை பின்பற்ற கற்போம் ,கற்போம் கற்போம் திருவள்ளுவரின் புகழ் பாட கற்போம் என கோஷம் எழுப்பி திருக்குறள் பதகையோடு சென்று பொதுமக்களின் காதுகளில் திருக்குறளை ஒலிக்கச் செய்தனர்.சுற்றுப்புற சூழலையும், நீர் மேலாண்மையும், இயற்கையையும் பாதுகாப்பதின் அவசியத்தை கேப் பொறியியல் கல்லூரி, லெவஞ்சிபுரம் மாணவ மாணவிகள் தமிழ் அறிஞர் பெ.மேகலாவருணன் முன்னிலையில் பி.எஸ். என்.கல்லூரியின் முதல்வர் முனைவர். செல்ல ராஜா அவர்கள் தலைமையில் கற்போம் ” கற்போம் பசுமையை பாதுகாக்க கற்போம் ” என்று சூளுரைத்து சாலை ஓரங்களில் இருந்த மக்கா குப்பைகளையும் மக்கும் குப்பைகளையும் சிறிது நேரம் அகற்றி பொதுமக்களுக்கு இயற்கையை பாதுகாப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாக அதிகாரி ரெனின் மற்றும் முதல்வர் நியூலின் செய்திருந்தனர்.

பசுமை நாயகன். மருத்துவர். தி. கோ.நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்து போராடிய முதல் தேசிய போராளி ) சமூக சேவகர் பேசுகையில் திருக்குறள் மேல் மட்டற்ற பற்றினால் சிறப்புகள் செய்கின்ற தமிழக அரசிற்கும், மத்திய அரசுக்கும், தொடர்ந்து- 24 வருடமாக திருவள்ளுவரை நிறுவிய நாளில் கடலில் பயணித்து மரியாதை செலுத்தவும், தாய் மொழிக்கும் நம் மண்ணிற்கும் சிறப்பு செய்வதற்கு எந்த வேறுபாடு இன்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், குமரி மாவட்ட காவல்துறைக்கும், நிர்வாகத்துறைக்கும், பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிர்வாகத்திற்கும், சுற்றுலா துறைக்கும் கலந்து கொண்டவர்கள் சார்பாகவும் தன் சார்பாகவும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!