தமிழகம்

இரயில் பயணத்தின் போது கவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இரயில் நிலையத்தில் நடைபெற்றது

80views
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் இரயில் நிலையத்தில் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பயணிகளிடம் இரயில் பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு செயல்கள் குறித்து இரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
இரயில்வே பாதுகாப்பு காவல்துறை அதிகாரிகள் இராஜேந்திரன் மற்றும் வினோத் கூறுகையில், சம்பந்தமில்லாத பிற நபர்களிடமிருந்து எந்த தின்பண்டங்களும் பெற்றுக் கொள்ளக் கூடாது, அவசியமில்லா தவரிடம் நட்பு பாராட்டுதலை தவிர்க்கவும் , இரயில் பெட்டியில் ஏறும்போதும் இறங்கும் போதும் கழிப்பறைக்கு செல்லும் போதும் மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தவும், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் ஏற்படுமாயின் இரயில்வே துறை பணியாளர்களிடம் தெரிவிக்கவும் , அத்தியாவசிய நேரங்களில் தொலைபேசி – 139 – எண்ணை தொடர்பு கொள்ளவும் எனக் கூறினர்.

தொலைதூர பயண குழுமத்தின் சார்பாக சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சமூக சேவகர் .மருத்துவர். தி. கோ. நாகேந்திரன் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பை கருதி அதிகாரிகள் கூறிய கருத்தை நடைமுறைப்படுத்துவதின் அவசியத்தை எடுத்துக் கூறி அனைவரும் இணைந்து கற்போம் கற்போம் இரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறிய பாதுகாப்பு முறைகளை பின்பற்ற கற்போம் , கற்போம் கற்போம் இரயில் பயணங்களில் சகசங்கள் செய்வதை தவிர்க்க கற்போம் , கற்போம் கற்போம் நம் கலாச்சாரத்தை மேம்படுத்தும் பரிமாற்றத்தை கற்போம் , கற்போம் கற்போம் நம் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க கற்போம், கற்போம் கற்போம் உலக ஒற்றுமையை பாதுகாக்க கற்போம் என அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மொழிகள் மக்களை இணைப்பதற்கும் , ஒருமைப்படுத்துவதற்கும் , மேன்மைப்படுத்தவும் அவ்வகையில் பழமையும் தென்மையும் உடைய தமிழுக்கும் தமிழ் பாரம்பரியத்திற்கும் பெரும் பணி செய்து உலக அளவிய பரிமாற்றத்தை ஏற்படுத்தி குமரிக்கு சிறப்பு செய்த தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார் , கவிமணி, தசாவதானி மற்றும் நம் முன்னோர்களான சேர, சோழ ,பாண்டிய, பல்லவ மன்னர்களையும் அவர்கள் வழியில் நம் பாரம்பரியத்தை உலகெல்லாம் எடுத்துச் சென்று நல்ல பரிமாற்றத்தை உண்டாக்கி நம் வருங்கால சந்ததியர்கள் உணரும் நிலைப்பாட்டை உருவாக்குகின்ற இன்றைய சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதோடு இன்றைக்கு இங்கிருந்து வட இந்திய மற்றும் காசிக்கும் புனித திருத்தலங்களை தரிசிப்பதற்காக செல்கின்ற பயணிகளும் இதர பயணிகளும் பாதுகாப்பாக பயணிக்கவும் நமது நல்ல பாரம்பரியத்தையும் பரிமாற்றம் செய்வதற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டி பிராத்திக்கின்றேன் என்றார் .
நிகழ்ச்சியில் மூத்த பயணி தோவாளை குமரேசன் (காசி முருகன்) உட்பட பலர் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் நம்பி வெங்கடேசன், தங்கவேலு, புவனேஸ் பிரபு, மாணிக்கவாசகம், திரவியம் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!