தமிழகம்

கன்னியாகுமரியில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

99views
கன்னியாகுமரியில் மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. முதலில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு குமரி ஒற்றுமை இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் உதயகுமார் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் வழக்கறிஞர் ஷேக் மைதீன், மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் . கலந்து கொண்ட அனைவரும் இணைந்து கற்போம் கற்போம் மனிதநேயத்தை பாதுகாக்க கற்போம், கற்போம் கற்போம் அகிம்சையை மேம்படுத்த கற்போம், கற்போம் கற்போம் நம் நாட்டை பாதுகாக்க கற்போம், கற்போம் கற்போம் உலக ஒற்றுமை பாதுகாக்க கற்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அடுத்து துப்புரவு பணியாளர் திரு .ஆறுமுகத்தின் முன்னிலையில் தொடர்ந்து துப்புரவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சமூக சேவகர் மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் இளைஞர்களோடு இணைந்து துப்புரவு பணியை மேற்கொண்டார். ‘இயற்கையை பாதிக்கும் மாசு ஏற்படுத்தும் பொருட்களின் பயன்பாட்டை குறைப்பது சிறப்பு என்று கூறினார். .
மூன்றாவது நிகழ்வாக சுகாதாரத்துறை அலுவலர் திரு. முருகன் முன்னிலையில் சமூக சேவகர் மருத்துவர் தி. கோ. நாகேந்திரன் மரக்கன்று நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் ஷேக் மைதீன் , உவரி செல்வன், இக்பால், சாகர் தீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!