தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர். சி. பி .இராமசாமி ஐயர் நினைவு பூங்கா முன்வாசலில் குமரி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி

45views
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சர். சி. பி .இராமசாமி ஐயர் நினைவு பூங்கா முன்வாசலில் குமரி மாவட்ட உலக திருக்குறள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவும நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தினார்கள். அமைப்பின் மாவட்டத் தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். அமைப்பாளர் ராஜகோபால் வரவேற்றார் .தென்குமரி கல்விக்கழக செயலாளர் மூத்த வழக்கறிஞர். வெற்றிவேல், மாவட்ட வாணியர் சங்கத் தலைவர் ராஜன், வழக்கறிஞர். திருத்தமிழ் தேவனார் , மதுமையான்,கீதா,குமரி உத்ரா, விஜி பூர்ணா சிங் , செல்ல கண்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . மருத்துவர் தி.கோ. நாகேந்திரன், சமூக சேவகர் குமரிக்கு பெருமை சேர்த்து தமிழ் வளர்த்த தொல்காப்பியர், திருவள்ளுவர், ஔவையார், கவிமணி மற்றும் அறிஞர் பெருமக்களை வணங்கி பேசுகையில் அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் . அழியும் தருவாயில் இருக்கும் மொழிகளில் உள்ள பொக்கிஷங்களை நம் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். நம் பழக்கவழக்கங்கள் நம் மொழியையும் பாரம்பரியத்தையும் எடுத்துச் செல்லும் விதமாக அமைய வேண்டும் என்று கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!