தமிழகம்

அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகள் தத்தெடுப்பதா கல்விக்கென ஒதுக்கப்பட்ட நிதி எங்கே – மக்கள் உரிமை இயக்கம் தலைவரும் சமூக ஆர்வலருமான மவுண்ட்.கோபால் கேள்வி

106views
தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளின் நிதியுதவி மூலம் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பட உள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடக்க விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தமிழக அரசுக்கு மக்கள் உரிமை இயக்கம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
‘அடுத்த கல்வியாண்டில், 500 அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அவற்றின் அருகிலுள்ள தனியார் பள்ளிகள் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியிருப்பது அதிர்சியளிக்கிறது’ என்று மக்கள் உரிமை இயக்கம் தன் கண்டனத்தை தமிழக அரசுக்கு பதிவு செய்திருக்கிறது.

மேலும், ‘அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை பலப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு தத்துக் கொடுக்க முனைவது, ஏழை மக்களின் குழந்தைகளின் கல்வி உரிமையை பறிக்கும் செயல்’ என கடுமையான விமர்சனங்களை மாநில அரசின் மீது வைத்துள்ளது மக்கள் உரிமை இயக்கம். இந்த நடவடிக்கையை அரசு கைவிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் துவக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றான, 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் வரவேற்றிருக்கிறார்.

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் ரூ.44,042 கோடி.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தனது தேர்தல் வாக்குறுதிகளில், சிதிலமடைந்த 10,000 அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் புதிதாகக் கட்டிக் கொடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, நான்கு ஆண்டுகள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
சமீபத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களின் இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.5 கோடியைக் கூட கட்டாமல், இணைப்பு துண்டிக்கப்படும் நிலைக்குச் சென்றது பள்ளிக் கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது?
நாட்டின் நாளைய தூண்களான மாணவ சமுதாயத்தின் கல்விக்குக் கூட, தனியார் அமைப்புகளிடம் உதவி கேட்கும் நிலையில் திமுக அரசு தள்ளப்பட்டிருக்கிறதா? அடிப்படை வசதிகளைக் கூட ஏற்படுத்தாமல், இந்த நிதியை என்ன செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு?’ என்று அரசுக்கு கேள்விகள் பல எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளனர் .
தனியார் பள்ளிகள் சங்கம் அறிக்கை:
இதனிடையே, இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்(டிபிஎஸ்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுப் பள்ளிகளை தத்தெடுப்பொம் என்று சொல்லப்படவில்லை’ என்றும் ‘அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் தனியார் பள்ளிகளின் பங்கு இருக்கும் என்றே சொல்லப்பட்டது; அரசுப் பள்ளிகளை மேம்படுத்த சிஎஸ்ஆர் மூலம் பங்களிப்பு இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், எந்தவொரு இடத்திலும் ‘அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படும்’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படவில்லை.

அரசுப் பள்ளிகளின் சீரமைப்பை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு பயன்பாடாக இருக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி வளர்சிச்கு உதவும் திட்டம் இது. அப்படியிருக்கையில், சொல்லப்படாத வார்த்தையை அரசியலாக்குவது பெருந்தன்மையை கொச்சைப்படுத்தும் விதத்திலான செயல். உதவ தயாராக உள்ள தனியார் பள்ளி தாளாளர்களின் பெருந்தன்மை கொச்சைப்படுகிறது’ என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது இது அரசுக்கு ஏற்ப்பட்ட மாபெரும் இழுக்காகும் இதை கேவலம் வேறே எதுவும் இருக்க முடியாது கடந்த அதிமுக ஆட்சியில் கிட்டதட்ட 1500 அரசு பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன தற்போது இந்த கேவலமாக நிலைக்கு அரசு பள்ளிகளை அரசு தரம் தாழ்த்தி இருக்கிறது.
கிட்டதட்ட பள்ளி கல்விக்கென ஒதுக்கப்பட்ட 44000 கோடி என்னவானது அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என மக்கள் உரிமை இயக்கம் தலைவரும் சமூக ஆர்வலருமான மவுண்ட்.கோபால் கேள்வி எழுப்பி உள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சாதாரண கட்டமைப்பு வசதிகள் கூட கிடையாது ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது எனவும் பல ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையும் இருப்பது மிகவும் கேவலமான நிலையையும் அரசின் கையாலாகாத தாஅத்தையும் இது காட்டுகிறது ஆக எந்த அரசு வந்தாலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதில்லை மாறாக அவர்களை மட்டுமே தரம் உயர்த்கிக்கொள்கின்றனர் ஆசிரியர்கள் சம்பளம் மட்டும் வருடா வருடம் உயர்ந்துகொண்டே போகிறது அவர்களுக்கும் பள்ளி மாணவர்களின் கல்வி குறித்து கவலை இல்லை எனவும் தனியார பள்ளி கல்லூரிகள் அணைத்தயும் அரசு உடமையாக்க வேண்டும் கல்வி என்பது வியாபாரமல்ல ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வியையையும் மருத்துவத்தையும் இலவசமாக அரசு தருவது தார்மீக பொறுப்பு ஆனால் ஓவ்வொரு நாளும் தனியார் பள்ளிகள் கல்லூரிகள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்படுவது அரசின் இயலாமையை காட்டுகிறது ஆகவே தனியார் கல்வி நிலையங்களை அரசு உடமையாக்குவதே சிறந்த அரசுக்கு நல்லது என மவுண்ட்.கோபால் கேள்வி எழுப்பி உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!