தமிழகம்

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இளம் ஆலிம்களுக்காக ‘திறன் மேம்பாட்டு பயிலரங்கம்’

46views
இன்று (07.01.2025) கள்ளக்குறிச்சி குறிஞ்சி மஹாலில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை “இளம் ஆலிம்களுக்காக திறன் மேம்பாட்டு பயிலரங்கம்” நடத்தியது.
மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையேற்றார். பொருளாளர் மௌலானா முஜீபுர்ரஹ்மான் மஸ்லஹி நெறியாளுகை செய்தார்.

துணைப்பொதுச்செயலாளர் மௌலானா முஹம்மது இப்றாஹீம் ஃபைஜி வரவேற்புரையாற்றினார். தலைவரின் தலைமையுரைக்கு பின், மாநில துணைத்தலைவர் சேலம் மௌலானா அபூதாஹிர் பாகவி “பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற” என்ற தலைப்பிலும் சென்னை மௌலானா சதீதுத்தீன் பாகவி “நீங்களும் பேச்சாளர் ஆகலாம்” என்ற தலைப்பிலும் சபையின் துணைப்பொதுச்செயலாளர் சென்னை மௌலானா இல்யாஸ் ரியாஜி “சரித்திரம் படைத்த பேராளுமை” என்ற தலைப்பிலும் பயிலரங்கை வழிநடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் மௌலானா இக்ராமுல்லாஹ் பாகவி நன்றியுரை ஆற்றினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!