தமிழகம்

ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன் ஜி அவர்களின் 44-வது நினைவு நாள் கொண்டாட்டம். அரசு பள்ளியில் படித்த குத்து சண்டை வீரர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.

48views
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தியாகி கக்கன்ஜி அவர்களின் 44-வது நினைவு நாள் நிகழ்வில் தலைவர் ரவி, மாரிமுத்து, தமிழ்வாணன், கண்ணன், ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கக்கன் ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகள் டெல்லி பாம்பே போட்டியில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி வென்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு கேடயம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பூவராகப் பெருமாள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளில் கக்கன் ஜி பிறந்தநாள் அன்று இது போன்ற சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். அதோடு கக்கன் ஜி அவர்களு கரை படாத கை எனவும், அவர் நினைத்திருந்தால் சொகுசு வாழ்க்கை மற்றும் சொத்துக்கள் வாங்கி குவித்திருக்கலாம். ஆனால் அவர் தன் பதவி காலம் முடிந்தவுடன் நடந்தே வீட்டுக்கு சென்றதாகவும், இது போன்ற எண்ணற்ற சாதனைகளாக அவரைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் என தமிழ்வாணன் புகழாரம் சூட்டினார்.
செய்தியாளர் : ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!