தமிழகம்

மதுரை மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் காணாமல் போவதால் காளை உரிமையாளர்கள் கலக்கம்

65views
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில். மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடப்பட்டு உள்ளன.
குறிப்பாக பாலமேடு அருகே முடுவார் பட்டி கோடாங்கிபட்டி மற்றும் மதுரை அருகே உள்ள தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் திடீரென காணாமல் போவதால் காலை உரிமையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.
அதுவும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.பாலமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த நாலாம் தேதி அதிகாலையில் மூன்று காளைகள் திருடப்பட்டன இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் காளைகளை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
இதைப்போல கடந்த எட்டாம் தேதி தத்தநேரியில் பொன்னம்பல ராஜன் துறை என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை திருடுபட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் களவாடப்படுவது காளைகளை வளர்ப்பவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் கண்ணும் கருத்துமாய் காளைகளை கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!