தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம் .

102views
மதுரை மாநகராட்சி சார்பில் 17 லட்சத்து 61 ஆயிரத்திற்காக டெண்டர் விடப்பட்டு விழா மேடை |தடுப்பு வேலிகள் , கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடங்களுக்கான தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் (ஜனவரி 15)அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
ஜல்லிகட்டு போட்டி தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் ஆகியவை இடையே மாவட்ட நிர்வாகம் சார்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவுக்கு வராத நிலையில் மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதாக அறிவித்துள்ளது
இது தொடர்பாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடைபெறுவதற்காக 17 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்காக மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு தடுப்பு வேலைகள் குடிநீர் விலா மேடை மற்றும் சாலைகள் சீரமைப்பு பணிகள் ஆகியவை நடைபெறுகிறது.
தென்காள் பாசன விவசாயிகள் மற்றும் அவனியாபுரம் கிராம கமிட்டி இல்லாமல் மதுரை மாநகராட்சி ஏற்று நடத்துவதால் கால் கோல் விழா ஏதும் நடத்தப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம்,  மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!