தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம மக்கள் நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அவனியாபுரம் பேருந்துநிலைபத்தில் நடைபெறுகிறது. 12 பெண்கள் உள்பட 70 பேர் கவனஈர்ப்ப ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

130views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் “தைப்பொங்கல்” அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் தென்காள் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம கமிட்டி இடையே இரண்டு வருடங்களுக்கு மேல் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் இரண்டு வருடங்களாக ஜல்லிக் கட்டு விழாவை அரசு நடத்தியது.
தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முன்பு நடைபெற்ற அமைதி கூட்டத்தில் இருதரப்பினர் இடையே சமரசம் தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.  இதனை தொடர்ந்து அவனியாபுரம் கிராம கமிட்டி சார்பாக ஊர் பொதுமக்கள் அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!