தமிழகம்

அப்பளம் நொறுக்க சுத்தியல் தேவையில்லை – விஜய் ரசிகர்கள் பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி

31views
சூப்பர் ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வரும் பத்தாம் தேதி சன் பிக்ஸர்ஸின் தயாரிப்பில் உலகெங்கும் வெளியாக உள்ளது. ரஜினியின் 169 வது திரைப்படமான ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ரஜினி மன்ற மாவட்ட பொறுப்பாளர் பாலதம்புராஜ் தலைமையில் ரஜினி ரசிகர்கள் கோவிலுக்கு வந்த னர். திருப்பரங்குன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன் கோவிலில் நீராடி முழங்காலால் நடந்து வந்து கோவில் வளாகத்தில் அங்க பிரதட்சனம் செய்தார். தொடர்ந்து அவருடன் ரசிகர்கள் ரஜினி ஜெயமணி,ரஜினி முருகவேல் ஆகியோர் கோவில் வாசலில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். முன்னதாக தேங்காயில் ஜெயிலர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என எழுதி அதை அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
பூஜைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினி ரசிகர்கள் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் 2.0 திரைப்படம் 800 கோடிக்கு விற்பனையானது ஜெயிலர் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு விற்பனையாகும் என நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து நடிகர் விஜய் ரசிகர்கள் ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் திரையுலகில் நடிக்க வரும்போதுதான் நடிகர் விஜய் பிறந்துள்ளார்.  அதனால், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைபட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அனைவரும் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க ரஜினி ரசிகர்கள் இனி குடிக்க மாட்டோம் உறுதி அளித்தனர்.
தொடர்ந்து பேசிய அவரது ரசிகர்கள் அப்பளம் நொறுக்க சுத்தியல் தேவையில்லை தயாரிப்பாளர் கூறியது போல் உரச உரச சந்தனம் மணக்கும் அதுபோல் எங்கள் தலைவர் ரஜினிகாந்த் உயர்ந்து கொண்டே செல்வார் வாழ்ந்த காலத்திலும் இனி வாழப் போகும் காலத்திலும் ரஜினியின் பின்னால் தான் எங்கள் பயணம் செல்லும் என தெரிவித்தனர்.
செய்தியாளர் : சு.வடிவேலன், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!