IPL 2022: கே.எல்.ராகுல், ரஷித், ஸ்ரேயாஸ், பாண்ட்யா, வார்னர் தேர்வு.. உற்சாகத்தில் ரசிகர்கள் !!
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி 2ஆவது வாரத்தில் மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுவிட்டன. அதேநேரத்தில் அடுத்தாண்டு களத்துக்கு வரும் 2 புதிய அணிகளும் வீரர்களை ஒப்பந்தம் செய்ய தொடங்கிவிட்டன.
இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படுபவர் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வந்த அவர், மனக்கசப்புகளுடன் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இந்த ஆண்டு அணி நிர்வாகத்திற்கும் வார்னருக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டேவிட் வார்னரும் ஒதுக்கப்பட்டார்.
ஐபிஎல் 15ஆவது சீசன் முதல் கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள்வரை பங்கேற்கும் என பிசிசிஐ அறிவித்தது. இந்த இரண்டு அணிகளுக்கும் மொகா ஏலத்துக்கு முன், வீரர்களை எடுத்துக்கொள்ள முடியும் என்ற விதி உள்ளது. அதாவது, 2022 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு அகமதாபாத், லக்னோ அணிகள் தலா 3 வீரர்களை நேரடியாக எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் அணி டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா ஆகியோரை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், லக்னோ அணி கேஎல் ராகுல், ரஷீத் கான், இஷாந்த் கிஷன் ஆகியோரை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அகமதாபாத் அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர், லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.