தமிழகம்

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் ஆய்வு

18views
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் துணை முதல்வர் ஆய்விற்கு வருகிறார் என்றவுடன் ஊழியர்கள் கட்டிடத்தின் மேல் உள்ள புற்களை அவசர அவசரமாக அகற்றினர். ஆய்வின் போது கழிவறை பராமரிக்கபடாமல் இருந்ததை கண்டு அதிகாரிகளை உதயநிதி ஸ்டாலின் கடிந்து கொண்டார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார் ஆய்வு கூட்டத்திற்கு முன்பாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகேயுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்விற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் வருகை புரிந்து ஆய்வு செய்வ உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் வாயிலில் நீண்ட நாட்களாக கட்டிடத்தின் மேல் இருந்த வளர்ந்த செடிகள், புல்களை ஊழியர்களை கொண்டு அவசர அவசரமாக அகற்றினர்.
அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பஞ்சு, நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யும் இடங்களில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அப்போது விவசாயிகள் பயன்படுத்த கூடிய கழிவறை சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்தபோது கழிவறைகள் சுத்தமில்லாமலும் பராமரிக்க படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உதயநிதி ஸ்டாலின் ஒழுங்கு முறை விற்பனை கூட செயலாளர் சந்துருவை கடிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு மாதாகோவில் அருகில் திமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் படிப்பகத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
செய்தியாளர் : த.சதிஷ், விழுப்புரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!