தமிழகம்

79 வது சுதந்திர தின விழா

145views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 15.08.2025 அன்று 79 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. முதுகலை முதலாமாண்டு, வணிகவியல் மாணவி நஜ்மா பர்வீன் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலாளர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ரைஸ் பிரான் ஆயில்/சன் பிளவர் ஆயில் (கூட்டுறவு துறை), மேனாள் ஆலை மேலாளர், முஹம்மது பாரூக் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் வாழ்த்துரை வழங்கினார். மூன்றாமாண்டு இளங்கலை வேதியியல் மாணவி சீரின் ஜாஸ்மின் சுதந்திர தின சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியாக முதுகலை முதலாமாண்டு வணிகவியல் மாணவி பௌசியா பேகம் நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அகமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், அஷ்ரப் அலி, சிராஜுதீன் மற்றும் இளையான்குடி ஊர் பிரமுகர்கள், கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!