விளையாட்டு

IND vs WI: ‘முதல் டி20 தொடர் ‘.. தோல்வி அடைந்ததற்கான காரணம் இதுதான்.. பொல்லார்ட் ஓபன் டாக்..!!!!

55views

மேற்கிந்திய தீவுகள் அணிகள் முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை கெய்ரன் பொல்லார்ட் விளக்கியுள்ளார்.

இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கொல்கத்தாவில் நேற்று முன்தினம் மூன்று போட்டிகள் கொண்டமேற்கிந்திய தீவுகள் அணிஆரம்பமானது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் நிகோலஸ் பூரன் 61 (43), கைல் மேர்ஸ் 31 (24), கெய்ரன் பொல்லார்ட் 24 (19) ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் எடுத்தனர்.மேலும் மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 157/7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதனை அடுத்து இந்திய தரப்பில் ஹல்ஷல் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இலக்கை துரத்திக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ரோஹித் சர்மா 40 (19), இஷான் கிஷன் 35 (42), சூரிய குமார் 34 (18), வெங்கடேஷ் ஐயர் 24 (13) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், 18.3 ஓவர்களில் இந்தியா 162/4 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கோலி 17 (13) ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில் ராஸ்டன் சேஸ் 2/14 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.இந்த போட்டியில் தோல்வி அடைந்ததை குறித்து பேசிய பொல்லார்ட், 6 முதல் 15-வது ஓவருக்குள், 9 ஓவர்களில் 46 ரன்கள் மட்டுமே அடித்துள்ளோம்.இந்த சமயத்தில் 18-20 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நிச்சயம் டப் கொடுத்திருப்போம். இதன்பின் எதிரணி பேட்டிங் செய்தபோது முதல் 6 ஓவர்கள் முடிந்த உடனே அவர்கள் பக்கம் ஆட்டம் சென்றுவிட்டது. ஆனாலும் எங்கள் அணியில் உள்ள பௌலர்கள், பீல்டர்கள் சிறப்பாகத்தான் செயல்பட்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இந்திய அணியிலிருக்கும் பவுலர்கள் அனைவருமே மிகச் சிறந்தவர்கள் தான். மேலும் பேசிய அவர் ,தவறு எங்கு நடந்தது என்பதை தெரிந்து கொண்டு, பின் அதனை உடனே சரி செய்து அடுத்த போட்டிக்குள் நிச்சயமாக தயாராகி விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அதிக புல்டாஸ் பந்துகளை போட வேண்டிய நிலை இருந்தது. இது மிகச்சிறந்த ஆட்டமாக தான் இருந்தது என தெரிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!