தமிழகம்

ஐஏஎஸ்.உ.சகாயம் தலைமையில் பிரபஞ்சம்- பல்லுயிர் சோலையில் “அருள் அரங்கம்” திறப்பு விழா

54views
இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும், தேனி மாவட்ட சர்வோதய மண்டலும், தேனி மாவட்ட ஹரிஜன் சேவா சங்கமும் இணைந்து “இயற்கை நல்வாழ்வியல் மற்றும் தற்சார்பு பயிற்சிகளுக்காக” முழுவதும் மரபு வழியில் கட்டப்பட்ட பயிற்சி அரங்கத்தின் திறப்பு விழாவானது மேலசிந்தலைச்சேரி,அருட்பேராற்றல் நகரினில்,
பசுமை நிறைந்த பூஞ்சோலையின் மத்தியில் அங்கம் வகித்து வரும் பிரபஞ்சம்-பல்லுயிர் சோலையில் காலை 09:30 மணி முதல் நண்பகல் 01 மணி வரை நடைபெற்றது.
நேர்மைக்கு சொந்தக்காரரான திரு.உ.சகாயம் இ.ஆ.ப.,(விருப்ப ஓய்வு) அவர்கள் இச்சிறப்பு வாய்ந்த அருளரங்கத்தின் திறப்பு விழாவிற்கு தலைமையேற்றும், திறந்துவைத்தும், சிறப்பான உரையும் நிகழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையின் நிறுவனரும் தேனி மாவட்ட சர்வோதய மண்டல் மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் செயலாளருமான கே.செல்வக்குமார் இறை வணக்கத்துடன் கூடிய குரு வணக்கம் செலுத்தி தமிழ்த்தாய் வாழ்த்து பாடி குத்துவிளக்கேற்றி விழாவிற்கு வருகை புரிந்தோருக்கு வரவேற்பு மற்றும் அறிமுக உரையாற்றி விழாவைத் துவக்கி வைத்தார்.
அகில காந்திய இயக்கத்தின் தலைவர் காந்தியவாதி செங்கோட்டை வி.விவேகானந்தன் அவர்கள் திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்தார்.
இன்பசேவா சங்கம் மற்றும் காந்திய இலக்கிய பண்ணையின் மேனாள் தலைவர் காந்தியவாதி முனைவர் எம். பாதமுத்து, உ.சகாயம் அவர்களின் இயக்கமான மக்கள் பாதையின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.இராஜன்,தேனி மாவட்ட சர்வோதய மண்டல் மற்றும் ஹரிஜன் சேவா சங்கத்தின் தலைவர் வி.நடராஜன் ஆகியோர் விழாவிற்கு தலையேற்று சிறப்பித்தனர்.
திண்டுக்கல் காந்தி காந்தி கிராம கிராமியப் பல்கலைகழகத்தின் வாழ்நாள் கல்வி மற்றும் விரிவாக்கத்துறை தலைவர் முனைவர், பேராசிரியர் எல்.இராசா,மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் காந்தியியல் துறையின் தலைவர் முனைவர், பேராசிரியர் சு.வெங்கடாச்சலம், இராமநாதபுரம் பால் கூட்டுறவுத்துறை தணிக்கை துறையின்மண்டல இணை இயக்குனர் எஸ்.பாலசுப்பிரமணியன், திருவாரூர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மனோகர் யாதவ், சத்திரப்பட்டி காந்தி சேவா மையத்தின் தலைவர் எம்.வன்னிக்காளை, தேனி மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் ஆர்.நாராயணசாமி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை மாற்றுத்திறனாளி அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ரவி ஆகியோர் திறப்பு விழாவிற்கு வந்தோரை வணங்கி,வாழ்த்தி உரையாற்றினார்கள்.
தேனி தானம் அறக்கட்டளையின் நிர்வாகி கே.செல்வராஜ், ஆண்டிபட்டி அன்னை டோரா நர்சிங் கல்லூரி மற்றும் சேவா நிலையத்தின் நிறுவனர் எல்.லட்சுமணன், விருதுநகர் மாவட்ட சர்வோதய மண்டலின் தலைவர் பாலகிருஷ்ணன், காந்தி உலா மாத இதழின் கெளரவ ஆசிரியர் சென்னை வி.சாந்தி கோபிநாதன்,கவிஞர் நாமக்கல் ராஜா, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், காந்திய உலா மாத இதழின் சட்ட ஆலோசகருமான அங்கணன், ஓய்வுபெற்ற துணை தாசில்தாரரும், காந்திய உலா மாத இதழின் கெளரவ ஆசிரியருமான கே.பவுன்ராஜ்,ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரும்,தேனி மாவட்ட சர்வோதய மண்டலின் நிர்வாகக் குழு உறுப்பினருமான குணசேகரன், டி.சிந்தலைச்சேரி முக்தா அறக்கட்டளையின் நிறுவனர் அருள்நிதி. பாலசரஸ்வதி, கம்பம் விவேகானந்தர் மாணவர் இல்லம்(ஹரிஜன் சேவா சங்கம்) ஏ.ஆர்.மலைச்சாமி, தேனி மாவட்ட சர்வோதய மண்டலின் பொருளாளர் ஆர்.நாட்ராயன், காந்திய உலா மாத இதழின் இணை ஆசிரியர் எம்.சதுரகிரி,தேனி வட்டார சர்வோதய மண்டலின் தலைவர் எம்.முத்துக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்காற்றி சிறப்பித்தனர்.
தேனி மாவட்ட சர்வோதய மண்டலின் துணைத் தலைவர் கே.முருகன் நன்றியுரையாற்ற திறப்பு விழாவின் இறுதியாக நாட்டுப்பண்ணுடன் அரளரங்கம் திறப்பு விழா நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளை,தேனி மாவட்ட சர்வோதய மண்டல், தேனி மாவட்ட ஹரிஜன் சேவா சங்கத்தின் அறங்காவலர்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்ணைந்து விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வழி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!