தமிழகம்

சுசீந்திரம் திரு மடத்தில் தருமை குருமணிகளின் அறுபதாவது ஜென்ம நட்சத்திர விழா

229views
சுசீந்திரம் திரு மடத்தில் மெய்யாம் தருமை குரு மணிகளின் அறுபதாவது ஜென்ம நட்சத்திர விழா , அர்ச்சனை வழிபாடு, திருவாசக முற்றோதல் நடைபெற்றது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் சமூக சேவகர், பசுமை நாயகன், மருத்துவர். தி.கோ. நாகேந்திரன், தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன. எழுபதுக்கும் மேற்பட்டவர்கள் இதனால் பயனடைந்தனர். தென்மண்டல கட்டளை விசாரணை தம்புரான் சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழாவை குறிக்கும் வண்ணம் அறுபது தென்னை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மனநலம் குன்றிய நூற்றைம்பதுக்கும் மேற்ப்பட்டவர்களுக்கு விருந்து உபசாரங்கள் செய்யப்பட்டது. முதல் முதலாக தேசிய அளவில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள நம் பாரம்பரிய வழிமுறைகளை டிசம்பர்- 2019-ல் எடுத்துக் கூறி ஆர்சனிக்கும் ஆல்பம் 30சி என்ற ஹோமியோபதி மருந்தை தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்பதை அறிவித்ததோடு பல்வேறு நிவாரண பணிகளை நாட்டின் பல பகுதிகளின் செய்தமைக்காக கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி என்ற பட்டத்தை பெற்றமைக்காக மருத்துவர் தி.கோ. நாகேந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்த தென்மண்டல கட்டளை விசாரணை தம்புரான் சுவாமிகள் மருத்துவரை கௌரவித்து வாழ்த்தி நல்லாசி வழங்கினார்.

காலையில் தொடங்கிய விழா இரவு நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் சிவ.பா.பிரபாகர், வீரநாதன், பேச்சிமுத்து, சுப்ரமணிய பிள்ளை ,ஆடலரசு, வேலு, கோபால் , ஆறுமுகம், தனவதிஅம்மா, புஷ்பவல்லி மற்றும் பக்த பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் உணவும் பிரசாதமும் வழங்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!